Krishna Krishna Mana Mohana.
Chita Chora Radha jeevana.
Megha Shyama Madhusoodhana.
Radhe shyam Yadhu Nandhana..👣
-
என் தனித்துவம் தேடி அழைபவன் நான்.
Introvert
The Soul of Rad... read more
அனுவாய், ஆற்றலாய், அருவமாய்,
அண்டமனைத்திலும்,
நிறைந்தவொன்றே,
அனுதினமும் உனை நினைக்க,
மறவேன்...🙏🏼-
நடைப்பழகிடும் தொலை அருவிகளே
Oh...!
முகில் குடித்திடும் மலை முகடுகளே Oh..!
குடைப்பிடித்திடும் நெடு மரச்செறிவே..!
பனி உதிர்த்திடும் சிறு மலர் துளியே..!-
மின்னும் பனிச் சாறு உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்துக் கொண்டாளே
வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே
பொன் மான் இவளா.,
உன் வானவில்லா..!-
தென்னங்கீற்றின் ஊடே பாயும் நிலவொளி போல
என் மனக்கீற்றின் வழியே உன் மகரந்த காதல் பாயுதடி.-
மரங்கள் பேசுகிறது காற்றின் மொழிக்கொண்டு.
இலைகள் இசைக்கின்றன இன்னிசை
ஒலிவொன்றை.
ஆழ்ந்த அமைதியின் நடுவே தூரத்தில் தெரியும் குளிர்நிலவு.
மனமோ கரைகிறது. மானுடம் என்னும் சிறையறையின் சன்னல் ஓரம் நின்று.!-
சுழலும் பூமியே சுழற்சியின் வேகத்தை சற்று குறைப்பாயோ.?!
ஆண்டும் அகவையும் ஓடிக்கொண்டே செல்கிறது.!
வாழ்வோ தேங்கிய நீரோடை யாக ஒரே இடத்தில் முன்னேற முடியாமல் முடங்கிகிடக்கிறது.?-
கல்லம் கபடமற்ற மழலைச் செல்வங்களை காணும் போதெல்லாம் மனம் குற்றவுணர்ச்சியில் கூனி குருகி போகிறது
-
எவ்வாறு உன் நிழல் உன் உருவத்தின் பிரதிபலிப்போ, அதே போல தான்,
நீ இன்றிருக்கும் சூழ்நிலை, சமுதாயம், அனைத்தும் உன் மனதின் பிரதிபலிப்பே ஆகும்.-