உன்னோடு ஓர்நாள்
உன் தோள் உரசிட
விழிகள் நாணம் கொள்ள
விரல்கள் ரேகை பதிய
இதழ்கள் மொழி மறந்திட
காலம் நேரம் எல்லாம்
மறந்தே நடந்திட
வானமெல்லாம் தொட்டு ரசிக்க
காற்றும் கொஞ்சம் இடைவெளி நிரப்ப
நீயும் நானும்
காதல் செய்வோம்
வா ..வா .. இவளின் பக்கங்களில்..
இன்னும் அருகிலே..
-
💕 கோயம்புத்தூர்💞
https://suno.com/s/vN4UhHZ3xsApJwoP
https://suno.com/s/SZ34QIxe... read more
காத்திருக்கும்
கவிதையும் நீ
காலை மாலை
கண் தேடும் தேடலும் நீ
காலம் நேரம்
கடந்த உணர்வும் நீ
காவியத்தில் இடம்பெறா
கதையும் நீ
காதல் காமம் தோற்கும்
கண்ணெதிரில் நீ
காற்றாய் வருடும்
கள்ளங்கபடமற்ற ஒருவன் நீ
காத்திருப்புகள் ஏங்கும் இவளின்
கண்ணாளன் நீ
-
உன்னை எதிர்பார்த்தே
தினம் நகரும்
இவள் நாட்களை
கொஞ்சம் எட்டி பாரடா..
நீயில்லாத நேரம்
நின் நினைவுகள்
சூழும் நொடியில்
புகைப்படம் பார்த்து
ரசிக்கும் விழிகளும்
முகம் தொடங்கி பாதம் வரை
தொட்டு ரசிக்கும் விரல்களும்
பக்கம் நெருங்கி முத்தமிடும்
இவள் இதழ்களும்
பேசும் மொழி
உன் காதில் விழவில்லையா
சொல்லடா ..எந்தன் காதலா..-
மூச்சு காற்றும்
மூக்கின் நுனியும்
முட்டி மோதும் நொடியில்
முணங்கல் கெஞ்சும் காதல்
முத்தமிட்டு அள்ளி அணைக்க
முந்திக் கொள்ளும்
முதலென முடிவென
-
பாத முத்தம்
பார்வை கொள்ளா அழகா..
சொல்லடா ...
இன்று இந்த நொடி..
மீதி முத்தம் தொட்டு தொடர
தீண்டா இடமும் தீயென சுடும்
உன் இதழ் நனைத்து போக..
-
பாரடா..
காதலா ..
இன்னும் கொஞ்சம்..
உன் பார்வைகள்
தீண்ட தீண்ட
திசைகளும் திணறி
போகுதே..
சுற்றம் மறந்த
நாணம் வந்து
இதழோரம்
வருடும் நேரம்
இரவல் கேட்கும்
வெட்கம் மணக்குதே..
திகட்டாத தேடல்
மீளாத மோகம்
மீட்டாத ராகம்
உன்னில் என்னை
கோர்த்து கொள்ளும்
பூமாலையினை
இடவா..
தொடவா..
எழுதவா..
மொழியின்
மொழி இதுவென..-
இமை
இமைக்கும் நொடி
நீ அருகில்...
இதழ்
இனிக்கும் நொடி
நீ என்னுள்..
இடை
இறுக்கும் நொடி
நீ நான் பிழை...
இவளுடன்
இவன்
எனும் நொடியில்
நேரம் காலம்
எல்லாம் போதுமே..-
அவன் விழி காண
குரல் கேட்க
தீராத ஆசையென
சொல்வதா
இல்லை
போதை என
சொல்வதா..
அவனிடம் கொண்ட
அன்பை வரையறுக்க
எந்த வார்த்தையும்
இடம் தரவில்லை
அத்தனை அழகு
அவனும் அன்பும்..-
உந்தன் புகைப்படம்
இன்னும் நெருக்கமாய்
இவளை நெருங்க
விரல்கள் நகர்த்தும்
இடைவெளியை
என்னென சொல்வேன்..
அந்த இடைவெளி
கொள்ளா அன்பே
உன் மீது எனக்கு..
நெருங்கி முத்தமிட்டு
ரசிக்கும் இவள்
விழிகளுக்கு
சொன்னாலும் புரியாது
தூரம் கடந்தும் இதயம்
தொட்டவனின் மனம்
இப்போது தூரமென..-