கணேஷ் பாபு ஜோதிசக்தி   (எண்ணத்தின் எழுச்சியே🖊)
175 Followers · 156 Following

read more
Joined 29 April 2019


read more
Joined 29 April 2019

சுதந்திர கிளியாய் வந்து
உன்னில் என்னை
சிறை வைத்த என் அழகியே

-



காதல் கொண்ட காலம்
மண்ணில் சிறகடித்து
பறந்தேன் காதலனாய்
கரம் கோர்த்த நாளில்
உன்னிலே சிறகடிக்கலானேன்
கணவனாய்!!!!....

-



உன்னில் நான் என்னில் நீ
என்ற கற்பனையிலே வாழ்ந்து
நிஜத்தின் பிரபஞ்சத்திலே
நீ நீயாக நான் நானாக இணையற்றே இருக்கிறோம்

-



நேர் நின்று பேசடா
கண்ணெதிரே நின்று பேசடா
என்றால் எப்படி
விழி மூட மறுக்கும் நாழிகையில்
என் இதழ் மட்டும் பேசிடுமா

-



உன் வெட்க சிதறலில்
சிந்திய வெண்மணிகளை
கோர்த்து வெட்கத்தின்
அழகியென வெண்மணி மாலை
சூட்டிடவா

-



பெண் கருவில் பூத்த மல்லியே
என் நாசியில் உன் சுவாசமே
என் கரம் சேரும் ரோஜாவே
வாழ்வில் மகிழ்ச்சி மலருமே
என் கண்னோடு உன்னை கண்டால்

-



என்னை காண உன்னை கண்டேன்
உன்னிலே எனையும் நான்
காண கண்டேன்

-



பிறை நிலைவை கண்டேன்
ஒற்றை கண் பார்வையில்
மதன்மதன் மதி மயங்கி
செய்வதரியாது நின்றேன்

-



உன் மணம் வீசி என் மனம் நாடி
அரவணைத்தேன்
அணைப்பின் அன்பில்
அடங்களானேன்

-



சந்திக்கும் காலங்களில்
இதழ் அசையாது
விழி மூடாது மெளனமே மொழிக்கும் நாழிகையில்
மனம் மட்டும் துடிக்கும்
ஓசையை எப்படி உணர்வேனோ
உன்

-


Fetching கணேஷ் பாபு ஜோதிசக்தி Quotes