நீரிலில்லா நிலத்திலே
நீந்துவாய் என்றால்
நீ நீரோடும் தாய்மொழியில்
நீராடுகிறாய் என்று அர்த்தம்.
உலகத் தாய்மொழி தின வாழ்த்துகள்-
நாடுப் போற்றி
நானிலம் வணங்கி
நீர் நீர்த்த உயிரில்
இன்னும் இந்த உலகம்
உலா வந்துக்கொண்டுதான் இருக்கிறது..
உங்கள் காவலில்...
ஆழ்ந்த இரங்கல்🌹🌹🌹-
நான் காதலிப்பது உண்மை தான்
ஆம் நான் காதல் செய்கிறேன்
அவன் இரு புறம் கொண்டவன்
அவன் உலகையே தனக்குள் அடக்கியவன்
அவன் வண்ணங்கள் கொண்டவன்
ஆனால்
அவன் எண்ணங்கள் என்றும் ஒன்றே..
அவன் பெயர் தான் புத்தகம்.
-
நடக்கும் போது
தடுக்கி விடும்
கல் உணர்த்தும்
நீ இன்னும் குருடாகவே இருக்கிறாய் என்று.-
நான் காண விரும்பவில்லை
முதுமையில் வறுமை
நான் காண விரும்பவில்லை
இளமையில் கல்வியின்மை
நான் காண விரும்பவில்லை
விருட்சமில்லா வீதிகளை
நான் காண விரும்பவில்லை
விருப்பமில்லா காதலை
நான் காண விரும்பவில்லை
மீண்டும் கனவில் நினைவுகளை
நான் காண விரும்பவில்லை
மழையில்லா மண்ணை
நான் காண விரும்பவில்லை
கலையில்லா கண்களை
நான் காண விரும்பவில்லை
சிலையாகி போன கோவில்களை
நான் காண விரும்பவில்லை
கயவர்கள் சூழ்ந்த இப்பூமியை
நான் காண விரும்பவில்லை
இதயமற்ற மனித உயிர்களை
நான் காண விரும்பவில்லை
இன்னுமோர் சடலத்தை
நான் காண விரும்பவில்லை
பறித்துக்கொள் என் கண்களை
நான் காண விரும்பவில்லை
இவ்வுலகை
எரித்து விடு என் சடலத்தை-
இன்னும் இரவு நேரம் நீண்டு கொண்டு தான் இருக்கிறது.
இன்னும் என் இமை மூடுவதை மறுத்து கொண்டு தான் இருக்கிறது.
ஆனால் நீ இங்கில்லை என்பதை மட்டுமே மனம் மறக்க மறுக்கிறது.
தூரத்தில் இருந்து காதல் செய்
அருகில் வந்து தொலைத்து விடாதே ❤️-
கார்முகில் கூடக் காதல் செய்யும்
கள்ளி இவள் வெள்ளை நிற ஆடை உடுத்தினால்-
உச்சியில் கொண்ட நித்திரையில் உலாவது கிடக்கும் சொர்பணம்
சாமத்தில் சாய்ந்து கிடக்கும் போது சாத்தானை போல ஆக்கிரமிப்பு செய்கிறதே-
நினைவுகள் மட்டுமே
சுமந்து இதயம்
கொடுக்கும் சத்தம்
நித்தமும் என் நித்திரை இழக்க செய்கிறது.-
உன்னை பின் தொடரும்
நதி நான்
சேரும் இடம் காதல் என்னும் கடலா?
கால் தடம் சேர்க்கும் கரையா?-