கொந்தளிக்கும் கோபத்தை கூட
கொஞ்சி தணிக்கும் மந்திரமாய்;
உந்தன், புன்னகை பொங்கிடும் முகம்.-
Follow me on instagram
Keerthi_shruthi_quotes
😺 என் கவிதை... read more
என்னவனிடம் ஆயிரம் ஆயிரம்
அன்பளிப்புகள் வேண்டாம், அன்பாக
அரை நொடி கை கோர்த்தால் போதும்.
ஓயாமல் தொடரும் உரையாடல் வேண்டாம்,ஒன்றாய் அமர்ந்து தோள் சாய்ந்து கடக்கும் மௌனம் போதும்.
கண் மயக்கும் மாளிகையில் வாழ்க்கை
வேண்டாம்,நம் காலம் கடந்த முதுமையில் கண்ணாளனே நாம் ஒன்றாய் காதல் செய்திட்டால்
போதும்.-
ஆழ்கடல் போன்று ஆழமானதடி உந்தன்
அழகிய கருவிழிகள்,அதற்கு நீ இட்டுக்
கொள்ளும் மையோ சூறாவளி தான்
எனக்கு தினமும் ரசித்து சுழன்று
வீழ்கிறேனடி கள்ளியே.-
உன் காதல்
ருசியில் மயங்கிய
என் இதயம்,
உன்னையும்
உன்னுடனான
காதல் நினைவையும்
பொக்கிஷம் போல்
சேகரித்து பூட்டி வைத்து
பாதுகாத்து மகிழ்கிறது.
-
அன்பும் அரவணைப்பும்
உன்னிடம் ஒருசேர காண்கையில்,
எனது உள்ளம் பறவையாகி,
என் உணர்வுகள் மொத்தமும்
உன் வசமாகி,என் உலகமோ
நாம் இருவரென மாறி
மற்றவையாவும் மறந்து
மறைகிறதே கள்வனே...
காரணம் அறிவாயோ..-
போட்டி போட்டு முந்துகிறது
என்னை களவாடி மயக்கிடும்
உந்தன் கண்கள் இரண்டும்.-
கைக்கெட்டும்
தொலைவில் தான்,
நாம் கண் அயராமல்
கட்டி சேர்த்த கனவுகள்
காத்திருக்கின்றன,
கறைகள் ஏதுமில்லா
முயற்ச்சியினை
கைவசப்படுத்தி
அவற்றை தொட்டு
பிடித்திட முயல்வோம் வா...-
என்னோடு நீயும் ...
என் உணர்வோடு
உந்தன் வாசமும்,
என் செவியோரம்
உந்தன் சுவாசமும்,
என் கனவோடு
எந்தன் நீயும்
(கண்ணாளனும்),
என் கையோடு
பற்றிய படி உந்தன்
கைகளும் போதுமே..
என்னோடு இன்பம்
இணைபிரியாமல்
இருந்து நான் வாழ்ந்திட...-
தேடும் இடத்தில்
நாம் தேடுபவை
தெரிந்துவிட்டால்
தேடித் திரிந்து
காண்பனவற்றின்
தேன் சுவை
தொலைந்து
மறைந்திடுமே.-
உன்னை நினைவில்
சுமக்கும் போது
துணை வரும்
கண்ணீர் துளிகள்
அனைத்தும்,என்னை
ஆறுதல் செய்ய
உன்னால் அனுப்பி
வைக்கப்பட்டவைகள் தானோ.-