காரணக்காதல்....
கானாமல் போக
சரி என்பதா
தவறென்பதா...?
எதுவாயினும்
நினைவுகள் என்பது
நிரந்தரம் தானே....!
-
சில காதல்கள்
புதைந்திருக்கும் வேர்களை போலவே...!
ஆழமானது....
அதன் ஆசைகள்..
இலை கிளைகளாக
வளர்ந்த பின்....
அதை பிடுங்குவது என்பது
சாதரனம் அன்று....!— % &-
என்றும்
பயன்படுத்தப்படும்
பொருட்களாகவே
பெண்கள்....
ஏதோ ஒரு காரணத்திற்காக...!
-
நினைத்தது கிடைக்காததை
தேடும் மனம்
கிடைக்கும் இடம்
தவறாகவே இருந்தாலும்
ஒருகனம் மயங்கத்தானே செய்யும்...!
-
அப்படி ஒன்றும் ஆசையில்லை
என்றே வெளிப்படும் பல ஆசைகள்
வேறு வழியின்றி....!-
எழுதுவதற்கு முன்
காகிதமும் பேனாவுமாய்
நீயும் நின் நினைவுகளுமே.....
முதற்பார்வையில்....!
-
கானலை காட்ட
காதல் முகமூடி
போதவில்லையோ...!
பல நாடகங்களை நிகழ்த்த
பொய் நாயகனாக
அவதரித்ததேனோ....?
-
எல்லோருக்கும் நினைத்தவையெல்லாம்
கிடைப்பதில்லை...!
கிடைக்தவையெல்லாம்
நிலைப்பதில்லை...!
கிடைப்பது நம் கையில் இல்லை
எனினும்...,
நிலைப்பது என்னவோ நம் கையிலே...!-
முடிவு பெறாத கவிதையாக
தொடங்கிய கனவு, முடியினும்...
கனவில் தொடங்கி காதல் முடியுமோ...!-