துகிலுரியப்படும் பாஞ்சாலிகள்
அன்று அடிமையாக்கபட்ட பாரதத்தாயை காக்க அவதரித்தார்கள் பல வீரர்கள்...
ஆனால் இன்று வரை துகிலுரியப்படும் பாரத பெண்களை காக்க எந்த கிருஷ்ணனும் அவதரிக்கவில்லை....
நீதிக்காக போராடும் பாஞ்சலிகளின் தேவை கிருஷ்ணனின் அவதாரம் அல்ல...
துச்சாதனன்களின் அழிவு! பேரழிவு!
கொடூரமான அழிவு!
மனதளவில் கூட துச்சாதனனாக அஞ்ச வைக்கும் அரசின் தண்டனை!
-
அவனை நினைத்து எழுதவில்லை...
இருந்தும்...
அவள் எழுத்துக்களோடு
அவளயும் அவனுடயதாக்கிக் கொண்டான் ....-
எதிர்பார்ப்புகள் இல்லை...
நம்பிக்கை கொடுக்கவும் இல்லை...
உடைக்கவும் இல்லை...
சிறு புன்னகை போதும்...
நாள் மலர்ந்து போகும்...
சில வார்த்தைகள் போதும்...
வசந்தம் வாசல் வரும்...
சில உறவுகளுக்கு பெயர் தேவைப்படுவதில்லை...-
அவனின் ஒற்றை புன்னகையில் பறிபோய் விடுகிறது ...
அவளின் இதயம்
மொத்தமும்...
-
மூன்று மணி நேரத்தில்..
மூவாயிரம் முறை பார்த்துவிட்டாள் கடிகாரத்தை...
முன்னேற மறுக்கின்றன முட்கள்..
முடிய மறுக்கின்றது பயண பாதை...
முகம் முழுவதும் தேடல் ..
முதல் சந்திப்புக்கான ஆவல்...
முந்த முயலுகின்றன ஒன்றை ஒன்று...
இதோ...
முழு நிலவாக...
முருகே வடிவாக ..
மழலை பேசி மகிழ்விக்க...
மலர்ந்தது மொட்டொன்று....
-
எவ்வளவு புரிந்தாலும் ,
ஏனோ, விலகத் தோணுவதில்லை சிலரிடமிருந்து-
அவள் உறுதியை போன்று
அவன் மென்மையும் இயல்பே...
அவள் முன்னிருக்கை பயணம் போன்று
அவன் பின்னிருக்கை பயணமும் இயல்பே...
அவளின் ஊதியத்தை போன்று
அவனின் ஊதியமின்மையும் இயல்பே...
அவனுக்கும் வலிகள் உண்டு...
அவனுக்கும் கண்ணீர் உண்டு...
அவனை அவனாய் ஏற்போம்...-
அவளின் அவனால் மட்டுமே அவளின் 'ஒன்றுமில்லை'யில் இருக்கும் ஓராயிரம் அர்த்தங்களை புரிந்து கொள்ள முடிகிறது....
-
விழிகள் திறக்காமலே விவரித்துகொண்டிருந்தாள் அவள்...
கலையா கனவொன்றை...
கனவை களைக்க மனமில்லா விழியும்....
விழியை திறக்க மனமில்லா கனவும்...
கதைத்து கொண்டிருந்தன ரகசிய கதை ஒன்றை...-
மன்றம் வந்த தென்றல் மஞ்சமும் வந்தது...
வத்திகுச்சியும் பற்றி கொண்டது உரசாமலே...
வெண்ணிலவை தேட வானமும் மறந்து தான் போனது...
நெஞ்சுகுள்ளே இன்னாருனு சொல்லாமலே புரிந்தது...
காட்டுகுயிலுக்கும் பாட்டுக்கு பஞ்சம் வந்தது...
இந்த பாடும் குயிலின் குரல் தந்த மயக்கதால்...-