பாசத்தையெல்லாம்
பரணில்மூட்டைகட்டு
பணமா பாக்கெட்டுலகட்டு
அண்ணன்என்னடா
தம்பிஎன்னடா
அப்பாஎன்னடா
அம்மாஎன்னடா
பணமில்லாத உலகத்துல ....
_கவிரா.
-
நினைவுகள் ...
மூடிய சாக்கடைக்குள்
மூழ்கிக் கிடக்கும் குப்பைகள் ...
_கவி.ராஉதயன்,சென்னை_ 63 .
-
என்னவள் முகத்தில் பருக்கள்
ஆம் நிலவில் மேடு பள்ளம்
கண்டது சந்திராயன் _3...-
என்னவள்
முகத்தில் பருக்கள்
ஆம்நிலவில் பள்ளம் மேடுகள்
கண்டது சந்திரயான்_3...-
முட்டாள்த்தனமான
மூடநம்பிக்கைகளை
உடைத்து எறிய
மூலைக்கு மூலை
பூத்துக் கொண்டிருக்கிறது
நட்(பு)பூ...
_கவி.ரா.உதயன்,சென்னை_63.
-
கிறித்தவர்களுக்கு மட்டுமே அனுமதி
என்றுஎந்ததேவாலயங்களிலும்
காணமுடிவதில்லை?
வேற்றுமதத்தவர்கள் நுழைந்துவிட்டார்கள்
புனிதம் கெட்டுவிட்டதுஎன்று எந்தமசூதியையும் கழுவிவிடுவதில்லை?
குழந்தை பயந்து விட்டது என்று சென்றால்
மந்திரித்து விடுகிறார்கள் ...
இந்துமதத்தில் மட்டும் ஏன் கெடுபிடிகள்?
கெடுபிடிகளை க(லை)ளையுங்கள்
மதம் மாறுவது தடுக்கப்படும்...
_கவி.ரா.உதயன்,சென்னை_63.
-
தேர்வுத்தாள்திருத்த
பேராசிரியர்கள்
அனைவரையும்
வரவேற்கிறோம்.
_சென்னைப்பல்கலைக்கழகம்
தம்பிமுன்னாடி
திருத்தினதற்கு
இன்னும்
பணம்வரலை...
அதனால்
நாங்களும்
வரலை...
_கவிராமீம்ஸ்-
விளைச்சல் முடிந்ததும்
நிலத்தைக்கையகப்படுத்தி இருக்கலாமே? ...
குழந்தைகளைக் கொன்றுவிடுகிறோம்...
இழப்பீடு தருகிறோம் என்பது போல்
பயிர்களைக் கொன்றுவிட்டு
இழப்பீடு தருகிறார்களாம்? ...
-
கிழவி கிழவன்
இளசுகள் பொடிசுகள்
எருமைபன்றியென
பல்லுயிர்களுக்கும்
முத்தப்பரிசளித்ததுமழை...
_கவி.ரா.உதயன்,சென்னை_63.
-
நீதிதவறினால் இயற்கை வழங்கும் ...
கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை
கண்டுக்காத கட்டுப்படுத்தாத அரசுகள்
காந்தியின் கண்ணாடியைத் தாண்டி
கண்ணீர் வழிகிறது ...
மகள்களுக்காய்
பாரத மாதாவும் கதறுகிறாள் ...
சாதி அழகானது _மணி.
மணிப்பூரில் அழகுபடுத்திக் கொண்டிருக்கிறது ...
அகிம்சையைக் கொன்ற வன்முறை
மக்களின் வயிற்றில் எரிந்து கொண்டிருக்கிறது தீ...
நீதி தவறினால்?...
பூமி வாயைப் பிளந்து
மொத்தத்தையும் கொல்லும்...
_கவி.ரா.உதயன்,சென்னை_63.
-