Kavinila Radha   (Kavinila Radha)
27 Followers · 16 Following

மெய் உணர்ந்தவள் 😍
ஏகாந்த காதலி ❣
Joined 4 May 2020


மெய் உணர்ந்தவள் 😍
ஏகாந்த காதலி ❣
Joined 4 May 2020
29 MAY 2020 AT 20:07

எல்லைகள் கடந்து வரும் காற்றில்
இலையோடிய ஓர் ஏக்கம் தெரிகிறது..!
உரயவைக்கும் பனியிலும்,உயிர் நனைக்கும் குளிரிலும் அயராது எல்லை காத்து நிற்கும் வீரனின் கண்களில்....!!
வெள்ளி நிலவாய் அவன் பெற்றெடுத்த குழந்தையின் ஸ்பரிசமும், குளிர்காய்ந்த கன்னத்தில் மனைவியின் ஆசை முத்தமும் நினைவுச் சின்னங்களாய் நீழுகின்றன...அடுத்த
விடுமுறை வரை....!!!

- இரா.கவிநிலா

-


25 DEC 2021 AT 18:52

தீர்க்கமாய் நிற்க்கிறேன் - தன்னம்பிக்கையோடு...!!

தொலைந்தோடிய கனவுகளுக்கு
சாட்சியாய் நிற்க்கிறேன்...!!

தொடவேண்டிய நினைவுகளுக்கு
காவலாய் நிற்க்கிறேன்...!!

தனித்து நின்றாலும் விழித்து
நிற்கின்றேன்

தன்னிகரில்லா உயர்வை அடைய
முனைந்து நிற்க்கிறேன்....!!



- Kavinila Radha




-


9 OCT 2020 AT 22:19

சலனமின்றி உரையாடுகிறாய்...
சாதுர்யமாய் எனை ஆழ்கிறாய்...
சலிப்பின்றி சள்ளை செய்கிறாய்...
சாதுவாகி சங்கடம் தருகிறாய்...
சர்க்கரையாய் இனிக்கிறாய்...
சந்தோசமாய் பொழிகிறாய்...
தாய்மை தந்து தாலாட்டினாய்...
தனிப் பெருமை தந்து சீராட்டினாய்...
தங்கப் பதுமை உன்னை கையில் ஏந்த தவங்கள் ஆயிரம் செய்தேனடி...!!
தர்மம் காக்கப் பிறந்தவளே எனக்கு இறைவன்
தந்த வரம் நீயடி...!!

- இரா.கவிநிலா


-


7 OCT 2020 AT 12:11


அமைதியான இடத்தில்
ஆழ்மனதின் ஓசைக்கேட்டிருந்தேன்...!!
ஓயாமல் ஒலித்து கொண்டிருக்கிறது
ஒப்பில்லா உந்தன் ஞாபகங்களை...!!
ஒய்யாரமாய் களித்திருந்தேன்...
ஒலிவில்லாமல் ரசித்திருந்தேன்...
ஒப்பனைகள் செய்தே கடந்திருந்தேன்
உன்னோடு நானாய் படர்ந்திருந்தேன்...!!
ஊனோடு உயிராய் கலந்திருந்தேன்...
என்றும் உனக்கானவள் நானென்றே உரைத்து நின்றேன்...!!

-இரா.கவிநிலா

-


5 OCT 2020 AT 19:10

வாய்மொழி வார்த்தைக்கு வலிமை அதிகமோ அல்ல விழி பேசும் பாஷைக்கு உரிமை அதிகமோ...!!
உயர்வான போராட்டம் நடக்கிறது உரித்தான உறவுகள் முன்னே...!!
மௌனம் கலையட்டுமே...மெலிதான சிறகாய் மெல்ல மறையட்டுமே...!!

- இரா.கவிநிலா

-


3 OCT 2020 AT 23:46

சுமையாகிப் போனதே...!!
சொல்லித் தீர்த்த பின்னே சுகமாய் தான் மாறுதே...!!
சொல்லின் மொழிகள் எல்லாம் சுவாசம் பெற்று போனதே...!!
சொல்லில் அடங்கா பெரும் மகிழ்வை சுலபமாய் அது காட்டுதே...!!!

- இரா.கவிநிலா

-


30 SEP 2020 AT 11:54

கடந்து செல்லும் மேகங்களாய் கண் மூடியே கடக்கிறோம் பல சமூக அநீதிகளை...!!!

ஆர்ப்பரிக்கும் அரசியலின் ஆணிவேரும் உலுங்கித் தான்
போகுமா....உருக்குலைந்து போகும் பல பெண்களின் பாதுகாப்பின் முன்பு...!!!


மனிதமும் இங்கே
மரித்துத் தான் போனதோ,
மானுடக் கண்ணின் முன்பே
மரணித்தே போனதோ...!!!

- இரா.கவிநிலா

-


28 SEP 2020 AT 12:09

இன்னிசைக் குரலால் இன்றியமையா பாடல்கள் படைத்திட்ட பிதாமகன்...!!
இயல்பான இசையால் மறித்த மனங்களை இலகுவாக்கிய உயிர்ப்பித்த இசைமகன்...!!
பிழைகள் கலைந்து,பிரியமாய் வழிநடத்தினாயே...!!
பறவிப்பயன் அடைந்திடவே,
பிரியா விடை கொடுத்தாயோ...!!
குரல் தந்து வரிகளுக்கு உயிர் தந்தாய்...!!
குறைவில்லா இசை நத்து எங்களை உயிர்பித்தாய்...!!
குமுறிய மனுதுக்கு இதம் தந்தாய்...!!
குன்றா இசை வெள்ளத்தில் கிறங்க வைத்தாய்...!!
இப்போது படைத்தவனை சிறைபிடிக்க படையெடுத்தாயோ...!!
சென்று வா இசைமகனே உன் இசைச் சாம்ராஜ்யத்தின் இணையில்லா அடிமைகளாய் மாறிப் போகட்டும் அந்த சொர்கலோகமும்...!!

- இரா.கவிநிலா


-


23 SEP 2020 AT 11:56

பெருங்காதலை புதைத்து வைத்தேன்...!!
பல காலமாய் தேக்கி வைத்தேன்...!!
பெரும் பாரமாய் சேர்த்து வைத்தேன்...!!
பிரியமாய் நினைவுகள் கோர்த்து
வைத்தேன்...!!
இரசியமாய் ஆசைகள் பல ஒளித்து வைத்தேன்...!!
ராப்பகலாய் நின் நினைவிலே சிக்கித் தவித்தேன்...!!
நிதம் தேயும் வெண்ணிலவாய் தேய்ந்திருந்தேன்...!!
நித்திரையிலும் உன் பெயரையே சொல்லி வைத்தேன்...!!
கானல் காரிகையாய் எனை நீங்கிப் போனாலும்....
காதல் தேவயையே உன் நினைவுகளை
அடைகாத்து அள்ளி வைப்பேன்...!!

- இரா.கவிநிலா

-


18 SEP 2020 AT 18:59

சொல்லில் அடங்கா சில வலிகளை
மனமெனும் ஏட்டில் மறைவாய் செதுக்கி வைத்திருந்தேன்....மந்திரமாய் நீயும் வந்து சேர மாயமாய் அவை மறைந்ததெப்படி....?

- இரா.கவிநிலா

-


Fetching Kavinila Radha Quotes