Kavimathi N💕   (✍️Kavimathi N💕)
47 Followers · 33 Following

read more
Joined 4 March 2023


read more
Joined 4 March 2023
15 HOURS AGO

எப்படியாவது தீர்த்து விடலாம்
என்பது என் மன கணக்கு
ஆனாலும் தொடர்கிறது
முதல் நாளின் மிச்சமுள்ள
வேதனைகளின் எச்சங்கள்
மறுநாளின் புது வடிவாய்..!

-


15 HOURS AGO

அனல் காற்றில் அட
அகிலமே வேகிறதே...
முட்டி முளைக்க வழியின்றி
தலையில் குட்டு பட்டு
மூச்சு திணறி சிமெண்ட் திரை சேலையால்
போர்த்தப்பட்ட என் பூமி
ஓ...மனிதா...
கொஞ்சம் இளைப்பாற
இடம் கொடு உனக்கும்
நம் மண்ணுக்கும்...
காணும் இடமெல்லாம்
சோலை ஆக்கவில்லை என்றாலும் பரவாயில்லை...
பாலை ஆக்காதே...
வரும் கால சந்ததிக்கு
தண்ணீர் செடி கொடி மரம் எனும்
வரைபடத்தை காட்டாமல்
வாழ்வதற்கு வழி கொடு நம்‌‌ இயற்கை அன்னைக்கு
வசந்த காற்று வீசட்டும் இனியாவது இத் தரணியில்...!!!

-


16 HOURS AGO

இருப்பினும் ஏமாறுகிறேன்
அவர்களின் சொல்வண்மையின்
பொய்களில் அடிக்கடி தொலைந்து -
அன்பெனும் ஆழத்தில்..!

-


16 HOURS AGO

இப்பொழுதெல்லாம்
அவரவர் தேவைகளில் மட்டுமே
வெளிப்படுகிறது
திகட்டுமளவு..!

-


2 APR AT 15:31

அழகழகாய் எழுத
ஆயிரம் பேர் இருந்தும்..‌.
அணு அணுவாய் ரசிக்க
ஒருவர் கூட இல்லையெனில்
படைத்த வரிகள் அனைத்தும்
பாதாளத்து பூக்கூடைகளே...
ஒவ்வொரு கவிஞனுக்கும்..!!!

-


14 JAN AT 10:16

எங்க இருக்க? கிளம்பிட்டியா..?
எப்போ வருவ..?
இன்னுமா கிளம்பள...???
என சற்று கோபத்தோடு
கரிசனம் கலந்த
அக்கறையோடு..
அதீத அன்போடு..
சண்டையிடும் தோரணையில்
சரி பார்த்து வா...
பக்கமா வந்துட்டு கூப்பிடு எனும்
உன் குரலை கேட்டிடாத என்
நகர்வுகளின் நிமிக்ஷங்கள்
எனது நரகங்களின் பிறப்பிடம்
என் வலிகளின் வாழிடம்..!!!🥺

-


14 JAN AT 9:17

நம்மை சுற்றி ஆயிரம்
உறவுகள் இருந்தாலும்...
நமக்கு உரிமையானவர்கள்
நம் அருகில் இல்லையென்றால்
நாம் அனாதை தான்..!🥺

-


6 JAN AT 1:14

என்ன சொல்லி வாழ்த்த என் இதயம் நிறைந்த உன்னை...
எங்கு சென்று தேட உன் அன்பு போன்ற ஒன்றை...
கவிதை மொழி பேசும் கவிஞனே...
களவாட சொல்லும் உள்ளமே...
கவிக்கே கவி எழுத இந்த
கவி அவளால் இயலவில்லை...
வார்த்தை அது போதவில்லை
அதனால் வேண்டிக் கொள்கிறேன்...
நீ நீண்ட ஆயுளோடும்
நல்ல ஆரோக்கியத்தோடும்
செல்வ செழிப்போடும் வாழ்வில்
எல்லா வளமும் நலமும் பெற்று
இன்புற்று சந்தோஷத்தின் செல்ல பிள்ளையாய்
இப் புவியை இனிதாய் வலம் வர - அந்த
இறைவனே துணை வர..! 🙏😊
✨✨💐💐 இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அணங்கே..!!!💐💐✨✨
என்றென்றும் ப்ரியமுடன் உன்...

-


5 JAN AT 23:16

என்ன சொல்லி வாழ்த்த என் இதயம் நிறைந்த உன்னை...
எங்கு சென்று தேட உன் அன்பு போன்ற ஒன்றை...
கவிதை மொழி பேசும் கவிஞனே...
களவாட சொல்லும் உள்ளமே...
கவிக்கே கவி எழுத இந்த
கவி அவளால் இயலவில்லை...
வார்த்தை அது போதவில்லை
அதனால் வேண்டி கொள்கிறேன்...
நீ நீண்ட ஆயுளோடும்
நல்ல ஆரோக்கியத்தோடும்
செல்வ செழிப்போடும் வாழ்வில்
எல்லா வளமும் நலமும் பெற்று
இன்புற்று சந்தோஷத்தின் செல்ல பிள்ளையாய்
இப் புவியை இனிதாய் வலம் வர - அந்த
இறைவனே துணை வர..!🙏😊
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அணங்கே..!!!
✨✨💐💐(To My Dear Arun Nambi / 6th Jan 2024)💐💐✨✨
என்றென்றும் ப்ரியமுடன் உன்...

-


3 JAN AT 20:31

உன்னை கடிந்து கொள்ள நினைக்கவில்லை
என் மனதை பகிர்ந்து கொள்ளவே விரும்பினேன்...
இருப்பினும் ஏதோ ஒன்று
நான் உதிர்த்த சொல்லின் மு(உ)ள் நின்று
உன்னை காயப்படுத்தி இருக்கிறது...
மருந்திட நினைத்து நான் கொடுத்த விளக்கங்கள்
நம்மிடையே வீணான விவாதங்களையே
வளர்த்து சென்றது...
அதனாலேயே இப்பொழுதெல்லாம்
நான் சற்று அதிகமாகவே
மௌனம் கொள்கிறேன் (விருப்பமே இன்றி)...
உன்னை அதிகம் விரும்புவதால்..!
இதை பிழை என கொள்ளாதே..
திமிர் என்றும் எண்ணாதே...
நான் உன்னிடம் அன்பு பழகுகிறேன்
எனக்கு தெரிந்த மொழியில்...
எனை புரிந்தால் நான் நலமே..!!
எனை பிரிந்தால் நான் வாழும் பிணமே..!!!

-


Fetching Kavimathi N💕 Quotes