கடந்தகால கற்றவையோடு
புதிய விடியலில் புதுமை புகட்டுவோம்
அனைவர்க்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-
என் அன்பு தோழா!!!!!
உன் பாதை நீ தேடு
உன் பயணத்தில் ஒரு புதுமை புகட்டு
கற்றலே உன் கண் இமை ஆகட்டும்
கற்றவையே உன் செயலாகட்டும்
வாய்ப்புகளை உன் வசப்படுத்து
உன் திறமை ஓர்நாள் இவ்வுலகறியும்...-
சுழல் காற்றில் சிக்கிய காகிதமாய்
காதலின் ஆழம் தேடி ஓடும் ஓர் ஓடையாய்....
காவிரியின் இரு கரைகளாய்
கண்ணீர் நதியில் தத்தளிக்கும் தவளையாய்.....
தொலைவின் தூரம் அறியா
இறகில்லா பறவைகள் இரண்டு.
-
கண்கள் காண துடிக்கும் கனவு நீ
இதய துடிப்பின் சப்தம் நீ
இன்னுயிர் தேடும் ஓருயிர் நீ
மனம் விரும்பும் பாடல் நீ
என்னுயிர் தாங்கும் காதல் நீயே....
என் கணவா!!!
-
பிறப்பின் பெருமை
நட்பின் வலிமை
உறவின் உண்மை
வாழ்வின் வல்லமை
இன்பத்தின் இனிமை
துன்பத்தின் துவலாமை
-
உன் உள்ளத்தின் வலிமை
உடல் சோர்வைச் சுட்டெரிக்கட்டும்
உன் வியர்வைத் துளியே...
விண்ணில் மழையாகட்டும்
உன் இருதயம் இயலா நிலைவரை
உன் உடலும் உள்ளமும்
உழைக்கட்டும்
என் இனிய உழைப்பாளர்கள்
தின நல்வாழ்த்துக்கள்
-
கனவுகள் கண் திறக்கட்டும்
எண்ணங்கள் ஏற்றம் கொள்ளட்டும்
துன்பம் தொலைந்தோடட்டும்
இன்பம் இல்லம் சேரட்டும்
இப்புத்தாண்டில் புத்துயிர் பெற்று என்றென்றும்
புன்னகைப் பூத்திடுவோம் ...
அனைவருக்கும் இனிய ஆங்கில
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
-
பிறப்பிலே நீ பெற்ற பெருமை
வாழ்வில் நீ சுமக்கும் பாரமோ !
தன் ஆசை அற்றவனாய்
பிறர் ஆசை போற்றுவனாய்
இறகில்லா சுதந்திர பறவையாய்
உன் உலகம் காக்கும் காவலனே!
இவ்வுலகில் உனக்கு
மிகையில்லை மித்திரா !
உலக ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்-
உன் நெஞ்சிலே நேர்மை நிறுத்து
உன் வியர்வை வான் மழையாய்
மன்னைத் தொடடும்
உன் நடையில் தன்னிகரற்றத் தைரியம் காட்டு
உன் முயலாமைக்கு முற்றுப்புள்ளி வை
உன் முயற்சியைத் தொடர்ச்சி ஆக்கு
உன் ஆற்றல் கண்டு அந்த
அச்சம் கூட அச்சப்பட்டு
அகிலம் தாண்டும்.-
உன் இருவிழி இமை ஏவிய அம்பில்
என் அகவை அறிந்தேனடா
உன் வார்த்தை வர்ணஜாலத்தில்
என் வாய்மொழி இழந்தேனடா
உன் நேசத்தில் நின்றவளாய்
உன் பாசத்தின் பேரலையில் சிக்கித்தவிக்கும்
பரிசலாய் நான்...
-