Need some real blessings immediately...
-
கண்ணுமணியே
உன காண நேரம்
அருகிலே வர
தளிர் நீட்டுன புதஞ்ச
விதயாட்டம் என் மனசும்
பசும தவிர வேற
ஏதும் கொள்ளல
காதல் நெஞ்ச கிள்ள
காமம் உசிர கிள்ளுது
நானும் உன் மாருலயே
துயிலும் கனவு கண்டே
கழுத்துல நா கட்டுன
கயிரு ஒன்னு என்
முகத்துல அழுத்தம் போடுது
நிமிசம் நித்திரை
தடுமாற என் கையு
உன்ன தேடி அலயுது
நாள் குறைய குறைய
இன்னும் தூரமா தெரியுது
ஆசையோட பயமும்
சேர்ந்து அதிகமாகுது
கனா சொன்ன பூமணியே
துயிலும் சொல்லி போ
-
நெறிச்சொல் கேட்டு
தன்மை வளர
தன்னை மறந்து
ஊர்ப்பிணி தீர்த்து
கடுஞ்சொல் இரண்டால் கெட்டவனானேன்...-
I want to hold your hand tighter
Until I get confused, which is mine...-
நிறையான என் மனமே
சிறு குறை கண்டா வருந்திட்டாய்
காழ்மனம் மாறிடுமே
கண்ணீர் தடம் மறைந்திடுமே
உன் சுடர் வளர்த்துக்கொள்
வழிநெடுக வீசிச் செல்
ஒளியை தேடி விட்டுப்பூச்சியும் வரும்
நீ தொலைத்துவிட்ட பாதையும் தேடிவரும்
ஓடாது நடந்து செல் அந்த விட்டுப்பூச்சியும் உன் பாதையில் தொடர்ந்து வரும்
-
மனமே அவளை நினயாமல் இரு
வலி தவிர ஏதும் மிஞ்சாது..
மைல் பல கடந்து இன்னு
உன்ன பாத்ததில்ல...
கடல் ஆழம் தூரமிருந்தும்
உன் கை கோர்க்க ஆச
குறையல...
நித்தம் நீயில்லனு என் அறிவும்
நீயும் மாத்தி மாத்தி சொன்னாலும்
கணப் பொழுது மனசு நீ எனக்குனு
நினச்சு விழிக்குது வலியோட...
என் கண்ணோரம் வடிஞ்ச கண்ணீரு
காய வழி தேடி நிக்குற..
இது சபலமா காதலானு என் மனசுக்கு
பகுத்தறிய ஞானமுமில்ல...
நட்புனு நீ குடுத்த ஒத்த பந்ததையும்
ஒடிச்சு உன்ன இழக்க தைரியமுமில்ல...
உள்ள நினப்பு மறச்சுகிட்டு
பகட்டு பேச தோனவுமில்ல...
புரியாத உறவோட, உன் பிரிவ
பத்தின பயத்தோட, உன் பேச்சு
மட்டுந்தா சந்தோஷம்...
-
கனவொன்று
நிஜமானது,
மகிழ் உச்சியிலிருந்து
கீழ்தள்ளி மீண்டும்
கனவானது...
-