2022.....!
வருடம் போலவே எல்லாமும் இரண்டு மடங்குத்தான்..
மாயங்களுடன் சில நாள்
காயங்களுடன் சில நாள்
இன்பத்திலும் மிதந்துள்ளேன்
துன்பத்திலும் துவழ்ந்துள்ளேன்
எதிர்பாராத தருணங்கள் சில
எதிர்பார்த்த நிலைகள் அமையாமல்
பல
புன்னகை சுமந்து கொண்டு சில நாள்
என்னகை மறந்தும் சில நாள்
நான் ஏன் என்று சில நேரம்
நான் ஏன் கூடாது என்று சில நேரம்
சற்றே சிரம் திருப்பி பார்த்தேன் உன்னை
என்னை எனக்கே புரிய வைத்தாய்...
நன்றி!-
முகிலுரித்த வானில்
அகிலனைத்தையும் கட்டிப்போடும்
துகிலுரித்த பௌர்ணமியின் ஒளியில்
மயக்கம் கொண்ட என் நெஞ்சினை தட்டி எழுப்ப எவரேனும் இங்கு உண்டோ..?-
என் வானின் வானவில் அவன்!
என் வண்ணங்களின் வர்ணம் அவன்!
என் கோடை மழையின் சாரல் அவன்!
என் தனிமையின் தேடல் அவன்!
என் நினைவுகளின் பாடல் அவன்!
என் புன்னகையின் பிம்பம் அவன்!
என் வாழ்கையின் எல்லை அவன்!-
வானவில்லின் வர்ணஜாலம் வானில் வளைந்திருந்த மாலையில்
தென்றலின் பரிசத்தை சுவாசித்து கொண்டிருந்த வேளையில்
நான் மட்டும் உன்னை காணாமல் போவேனோ என்று என் மனம் தொட்டு சென்றது மண் வாசம் வீசும்
என் முதல் காதல்…!! மழை✨
-
Why did you do this...???
We all know life is not easy but suicide is not a solution..!
-
தென்றலின் முகவரி தேடி வெகுநாட்கள் அலைந்து கொண்டிருந்தேன்...
என் மூச்சுக்கற்றாய் என்னுள் அது வாசம் செய்வதை அறிந்திராத பேதையாய்..!
-
நித்திரை தொலைத்த நள்ளிரவில்
தனிமையில் மிதக்கும்
கருமை தீட்டிய
நெடு வானின் ஒற்றை கவிதையினை
தொட இயலாது தவிக்கின்ற
எனது அடம்பிடிக்கும் மனதை எவ்வாறு ஆறுதல் செய்வேன்..?
-