Kanisska Jayakumar   (கனிஷ்கா ஜெயக்குமார்)
80 Followers · 13 Following

Instagram @kanisska_jayakumar
Joined 9 March 2018


Instagram @kanisska_jayakumar
Joined 9 March 2018
20 JAN AT 21:34

Amidst all the blues and hues..
Still clinging on to the
'Old School Metaphors' !!!


- Kanisska Jayakumar

-


15 JAN AT 12:33

பயணம்

நீண்ட தூரத்தை
கடத்தி விட்டோம்..
வா.. இனியேனும்
நாம் 'பயணிப்போம்' !!!

-


7 MAY 2023 AT 18:22

யாதெனில் அவன் ஓர் கலைஞன் !


உண்மையை உரக்க உரைக்கும்
ஓர் கலைஞனை ..
நீதியை நிமிர்ந்தெழுதும்
ஓர் கலைஞனை ..
இவ்வுலகம் என்ன செய்யும் ?

மேடைகள் மறுக்கும் ..!
அடையாளங்கள் அழிக்கும் ..!
செய்தால் என்ன ..

வாய்ப்பிற்காக காத்திருக்கையில் ..
நிறம் மாறும் பச்சோந்தியோ..
குணம் மாறும் நரியோ அன்று அவன்..!

தனக்காக மேடையை ..
தானே 'உழைத்துருவாக்கத்' தெரிந்தவன் அவன் !!
யாதெனில் அவன் ஓர் 'கலைஞன்' !!!

-


17 JAN 2021 AT 17:21

புரிதல்

மழைச் சாரலுக்குப் பின்னான
மண்வாசனையை போல..
சின்னஞ் சிறு சண்டைகளுக்ககு
பின்னான..
நம் புரிதல்கள்..
ரம்மியமானவை !!!

-


8 NOV 2020 AT 13:12

பெர்னிசியன்ஸ்
விதியால் இங்கே ஒன்றானோம்!
மதியால் நாங்கள் வாழ்வதற்கு!
சீருடை அணிந்து சுற்றித் திரிந்தோம்!
கைகோர்த்தே வளாகத்தை வலம் வந்தோம்!
எங்கள் அரட்டைகளால் அரங்கத்தை நிரப்பினோம்!
எங்கள் கலகலப்பும் கலாட்டாவும்
கல்லூரி நாட்களுக்கு உயிரூட்டும்..!
பட்டாம்பூச்சியாய் வட்டமடித்தோம்!
சிறகுகள் விரித்தோம்
மருத்துவராய் சிறக்க!!
உழைப்பையும் ஒன்றாய் கொடுத்தோம்!
வெற்றியையும் ஒன்றாய் சுவைத்தோம்!
துயரங்கள் பல வந்த போதிலும்
விட்டுக் கொடுத்ததில்லை!
துன்பங்கள் பல நேர்ந்த போதிலும்
துணை நின்று தோள் கொடுக்கத் தவறியதில்லை!
திரைப்படங்களை மிஞ்சும் நிகழ்வுகள் பல நேர்ந்த போதிலும்
எதிர்மறையை நேர்மறையாக்கினோம்
ஒரே குடும்பமாய் நின்றோம்..
ஒற்றுமையை எங்கள் பலமாக்கினோம்!
எங்கள் சொத்தாக்கினோம்!!
எதுவந்த போதிலும் நாங்கள் பிரியவில்லை..
எதிர்வரும் காலத்திலும் எங்களுக்குள் பிரிவில்லை..!!
என்றும் ஒன்றாய் நாங்கள் 'பெர்னிசியன்ஸ்'.. எங்கள் தாரக மந்திரத்துடன் 'Rebel and Rise' !!!

-


7 NOV 2020 AT 20:18

வேர்கள் என்றும் மாறா

பள்ளி என்னும் மரத்தின்
பிள்ளைகள் நாங்கள்..!
இன்று காற்றிக்கேற்ப,
சூரிய ஒளிக்கேற்ப,
பல இடங்களில் பரிந்து
கிளைகளாய் துளிர்விட்டாலும்..
எங்கள் வேர்கள் என்றும் மாறா!!!

-


8 OCT 2020 AT 17:04


மேகங்களை உதவிக்கு அழைக்கின்றேன்!
காக்கும் மேகங்களே வாருங்கள்!!!
வந்து நிலவின் பார்வையிலிருந்து
எம்மைக் காத்திடுங்கள்!
நிலவை சிறைப்பிடித்து வையுங்கள்!
சற்று கவனம் தேவை
குசும்பு பிடித்த நிலவு எட்டிப் பார்க்கும்..
விடாதீர்கள்.. சூழ்ந்து கொள்ளுங்கள்..!
நான் அவளிடம் பேசிவிட்டு வருகிறேன்..!!!

-


8 OCT 2020 AT 16:58

காக்கும் மேகங்களே

கடல் கடந்துள்ளேன்..!
பல்லாயிரம் மயில்கள் தாண்டி அவளுள்ளாள்..!
அவளிடம் பேசும் ஒவ்வொரு முறையும்
வேவு பார்க்கிறது நிலவு..!
எங்கே நாங்கள் பேசுவதை நிலவு
கேட்டுவிடுமோ பார்த்து விடுமோ
நிலவில் இருக்கும் அவள் பாட்டியிடம்
முறையிட்டிடுமோ என்ற ஐயத்தோடே
அவள் எண்ணிற்கு அழைக்கிறேன்..!
அவளுக்கோ பாட்டி என்றால்
மரியாதையுடன் கூடிய பயம் வேறு..!

-


8 OCT 2020 AT 16:50

காக்கும் மேகங்களே!

கடல் கடந்துள்ளேன்..!
பல்லாயிரம் மைல்கள் தாண்டி அவளுள்ளாள்..!
அவளிடம் பேசும் ஒவ்வொரு முறையும்
வேவு பார்க்கிறது நிலவு..!
எங்கே நாங்கள் பேசுவதை நிலவு
கேட்டிடுமோ.. பார்த்திடுமோ..
நிலவில் இருக்கும் அவள் பாட்டியிடம்
முறையிட்டிடுமோ..
என்ற ஐயத்தோடே அவள் எண்ணிற்கு அழைக்கிறேன்..!
அவளுக்கோ பாட்டி என்றால் மரியாதையுடன் கூடிய பயம் வேறு..!
மேகங்களை உதவிக்கு அழைக்கின்றேன்!
காக்கும் மேகங்களே வாருங்கள்!!!
வந்து நிலவின் பார்வையிலிருந்து எம்மைக் காத்திடுங்கள்!
நிலவை சிறைப்பிடித்து வையுங்கள்!
சற்று கவனம் தேவை
குசும்பு பிடித்த நிலவு எட்டிப் பார்க்கும்..
விடாதீர்கள்.. சூழ்ந்து கொள்ளுங்கள்..!
நான் அவளிடம் பேசிவிட்டு வருகிறேன்..!!!

-


22 SEP 2020 AT 23:57


அந்தி சாயும் வானம்
தன் மேகங்களை கீழிறக்கி
என் காயங்களுக்கு மருந்திட்டது..!
என் வருகையறிந்து முன்னரே வந்து
காய்கிறது நிலா.. என்னைக் காண..!
என்றும் என் தனிமையை
தன் இருப்பால் நிரப்பும் தென்றல்
இன்றும் என்னுடனே அமர்ந்திருந்தது..!
என் மௌனங்களை மொழியாக்கம் செய்து..
என்னைத் தேற்றி..
எனக்கு மருந்தளிக்க என்றும் தவறியதேயில்லை
'இயற்கை'..!

-


Fetching Kanisska Jayakumar Quotes