Kani Vijay   (Kani Vijay)
296 Followers · 22 Following

எழுத்தின் மீது பெரும் காதல் எனக்கு!!!
Joined 5 April 2018


எழுத்தின் மீது பெரும் காதல் எனக்கு!!!
Joined 5 April 2018
26 JUN AT 17:26

பேருந்து பயணத்தில்
நீ சாய்ந்துக்கொள்ள
கொஞ்சம் நிமிர்ந்து
அமர்ந்துக்கொள்கிறது
என் காதல்!

-


30 MAY AT 0:15

நமக்கென இருக்கிறார்கள்
என நம்புகிறவர்கள்தான்
பின்னாளில் இல்லாமல்
போகிறார்கள்,
இருப்பதும்
இல்லாமல் போவதுமாக
இருக்கும் இந்த வாழ்க்கை
இப்போது
நிரந்தரமாகிப் போனது!

-


14 MAY AT 9:06

பின் பேசுவீர்கள் என தெரியும்!
எள்ளி நகைப்பீர்கள் என தெரியும்!
என் நம்பிக்கையை உடைப்பீர்கள் என தெரியும்!
தெரிந்தே தான் திரும்ப வருகிறேன்!
தெரிந்தே தான் அன்பை கொடுக்கிறேன்!
ஏனெனில், இருப்பதிலேயே எனக்கு அதிக போதை தருகிறது இந்த
"மன்னிப்பு "

-


1 MAY AT 8:45

இந்த வாழ்வில்
என்ன கேட்டுவிட போகிறேன்?
என் கன்னங்களை
ஏந்திக்கொள்ளும் கைகளும்,
கணங்களை தாங்கிக்கொள்ளும்
இதயத்தை தவிர!
என்ன கேட்டுவிட போகிறேன்!?

-


23 APR AT 9:58

ஊரின் தனித்த ஆலமரத்திற்கு
கையசைத்து செல்கிறாள்
ஜன்னல்லோர சிறுமி!

-


23 APR AT 8:46

அன்பை கொடுக்கிறோம்,
திரும்ப எதை பெறுவோம்?
அதீத நம்பிக்கை கொடுக்கிறோம், துரோகம் தருகிறார்கள்!
அதீத பாசம் கொடுக்கிறோம்,
ஏமாற்றம் தருகிறார்கள்,
தொடர்ந்து நேசிப்பை கொடுக்கிறோம்,
பைத்தியக்கார பட்டம் தருகிறார்கள்,
சரி,
எதையும் தெரியாமல் செய்வதற்கு பெயர் தானே அன்பு!

-


16 APR AT 11:44

எழுதி விட காத்திருக்கும்
எல்லா பேனாக்களிலும்
சொட்டிகொண்டிருக்கிறது
ஒரு உயிரின் மை (மெய் )!

-


2 APR AT 0:27

பால்யத்தின் நினைவுகளை
கோதிவிடுகிறது
காதோர நரை முடி!

-


30 JAN AT 11:27

இறுதியில்
பற்றி எரியும்,
அந்த உடலுக்கான ஆறுதல்
இனி எந்த போராட்டமும்
இல்லை!

-


29 JAN AT 14:17

விட்டு விலகிப்போக
ஆயிரம் காரணங்கள்
இருக்கலாம்
இழுத்துப்பிடிக்க
அன்பு ஒன்று போதும்!

-


Fetching Kani Vijay Quotes