எதுவுமே வேண்டாம்
என்று
பிதற்றுகிறது மனது
ஆனால் மனதின்
அந்த நடிப்பு
நீண்ட நேரம்
நீடிப்பதே இல்லை!-
என்னுடைய படைப்பு வரிசைகளை பின்வரும் ஹாஸ்டாகுகளை கிளிக் செய்து படிக்க... read more
இரவை விரட்டி விரட்டி
துரத்துகிறது கடிகாரம்
என்று நினைத்தவாரே
அதனை பார்த்தேன்
நின்று போயிருந்தது
அட இதனை இயக்குவது
பேட்டரி தானே என்று நினைத்தேன்
அதனை இயக்குவது
யாரென யோசித்தேன்..
பயணப்பட்ட யோசனைகளின்
இறுதியில் ஒரு யோசனை
என்னை இயக்குவது நீ என்றால்
உன்னை இயக்குவது யார்?-
எவ்வளவு பாரத்தை
சுமக்க முடியுமோ
அதற்கு மேல்
சுமக்க முடியாது என்று
உடல் சொல்லிவிட
நாம் அதற்கு மேல்
சுமப்பதில்லை
பாவம் இந்த மனது
அதனால் அப்படி
சொல்ல முடியவில்லை
சொல்ல யாரும்
விடுவதுமில்லை!-
ஒப்பிட்டு பார்க்காத வரை
மனது நிம்மதியாக தான் இருந்தது
ஆனால் நிம்மதியாக இருப்பது
இந்த நிம்மதிக்கே
பிடிக்காது போலும்
எதையாவது ஒப்பிட்டு
கவலைகளை தன் மீது
தெளித்துக் கொள்கிறது!-
ஒவ்வொரு வார்த்தைக்கும்
அர்த்தத்தை யார்
தருகிறார்கள்
வாசிக்கும் ஒவ்வொருவரும்
தானே
அப்படி என்றால்
இந்த கவிதையை
என்னுடையது என்று
நான் எப்படி சொல்வது
இதுவரை நீங்கள்
வாசிக்காமல் இருந்த
உங்களது ஒரு கவிதையை
நான் நினைவுப்படுத்துகிறேன்
என்று சொல்லி
முடித்து விடலாமா?!-
அலைகள் அழைக்கின்றது!
(காய்ந்த புல்வெளி - சிறுகதை தொகுதியின் இரண்டாவது சிறுகதை)-
சொற்களை அழைத்து வர
பேனா என்கிற ஒரு
வாகனம் இருந்தது
சொற்களை நிறுத்தி வைக்க
காகிதம் என்கிற ஒரு
இடமிருந்தது
இப்பொழுது எல்லாம்
வாகனமும் தேவையில்லை
இடமும் தேவையில்லை
வாயால் பேசி வானத்தில்
பதிவு செய்து விடலாம்
ஆனாலும் புதிதாய் ஒரு
பேனாவையோ அல்லது
ஒரு அழகிய நோட்டு
புத்தகத்தையோ பார்த்தால்
வாங்கி வந்து விடுகிறேன்
அவைகளின் பயன்பாடு மட்டும்
மாறி போய்விட்டது
அவை இன்று வெறும்
காட்சி பொருளாக ...!
-
ஒரு மேசையின் எதிர்
திசைகளில் அமர்ந்து
சந்தித்து பேசிவிட்டு
அவரவர் திசைகளில்
பயணித்து விடுகிறோம்
ஆனால் இந்த நினைவுகள் மட்டும்
சந்தித்த திசையில்
முட்டிக்கொண்டு
நின்றவாரே
நகர மாட்டேன் என
அடம் பிடிக்கின்றன!-