இதுவரை நினைத்திருந்தேன்
பூமிக்கு ஒரு நிலவென்று..
இன்று நான் கண்டுகொண்டேன்
பூமிக்குள் ஒரு நிலா உண்டென்று..
வஞ்சி உன் பொன்முகம் கண்டபின்...
❤-
தங்கத்தில் பூ செய்து
பூவுக்குள் பால் சேர்த்து
பாலோடு பேரொளி கலந்து
பேரழகாய் படைத்து அதை
உன் திருமுகமாக்கினானோ
இறைவன்...-
மலரிதழில் வாசம் போல்
மனம் முழுதும் நிறைந்தவளே
வேருக்குள் நீராக
உயிருக்குள் கலந்தவளே
ஊரரறிய உன் கரத்தை
உரிமையாய் பிடித்திடவா
உன் சிரிப்பை காண்பதற்கே
உன் ஆசையெல்லாம் நிறைவேற்றிடவா
உச்சிமுதல் பாதம் வரை
இதழ் கொண்டு இசை மீட்டிடவா
இருக்கின்ற காலம் வரை
இமைபோல உனை காத்திடவா
இணையிலா காதலுடன்
-
தீராத போதை அவள்.. என்றும்
மாறாத காதல் அவள்..
தேயாத நிலவும் அவள்.. நெஞ்சில்
ஓயாத நினைவும் அவள்..
-
நிழலைக் கூட காணவில்லையே..
தனிமை இன்றும் தீரவில்லையே..
சொல்ல நினைத்தால் சொல்லும் வரலையே
தவிப்பு தீர மருந்துமில்லையே..-
பாலை நிலமும் பூ பூக்கும்
பைங்கிளி அவள் நடந்தால்..
காவிய நிலவும் வெட்கி தலைகுனியும்
ஓவியம்போன்ற அவள் திருமுகம் கண்டால்..
முத்தும் பவளமும் தங்கமும் வைரமும்
தேவதை அவள் புன்னகைக்கு ஈடாகுமோ..
எண்ணமெல்லாம் நிறைந்துவிட்ட காரி கையை
எண்ணாமல் என் நாள் கழிந்திடுமோ..
-
சோகங்கள் மறந்திடு
பெண் பூவே
சுகமான நிகழ்வுகள்
தருவேன்..
நிலவுள்ள இரவு போல்
இதமாக
இருப்பேனே வாழ்வெல்லாம்
துணையாய்..
மழைகண்ட பயிரென உன்
மனம் துளிர்க்கும் வரையிலே
அமையாது என் உயிர்
ஆயிழையே-
எப்போதும் இருந்தாலும்
இதயத்தின் துடிப்பென
இணைந்தவள் நீயடி..
அதிரும் வசனங்கள்
உதிர்க்கின்ற தேன்மொழி
அனல் தீரும் வரையிலே
அமைதியாய் நானடி..-
மதிக்கப்படுகின்றன..
கடிகாரமும் மின்விசிறியும்...
ஆண் மகனும்...-
எங்கிருந்தாலும்
என்ன செய்தாலும்
என்னென்ன நடந்தாலும்
எல்லாமே மறந்தாலும்
என் நெஞ்சம் முழுவதுமே
என்னவளே உன் ஞாபகமே...!!!-