எதையெல்லாம் முடியாதென்று
எண்ணுகிறோமோ
அதையெல்லாம் நம்மைப்போல
ஒரு மனிதன் தான்
செய்துமுடிக்கிறான்.!-
ஒரு இதயம் உடைக்கப்படுகிறது
ஒரு இதயம் உடைய காரணமாக
அமைகிறது.!
இதயத்திற்கு காதல் செய்யும்
துரோகத்தால்.!
-
ஒவ்வொரு வினாடிக்கு பின்
என்ன நடக்கும் என்பதுதான்
வாழ்க்கையின் சுவாரசியமே.!-
எந்தக் காதலும்
நிரந்தரமாக இறப்பதில்லை
அவ்வப்போது பிழைத்துக்
கொள்கிறது ஒரு மலர்ந்த
மலரை பார்த்தால் கூட.!-
எத்தனை பூக்களுக்கு தெரியும்
அத்தனையும் அழகால்
மிளிருவதற்காக மட்டுமில்லை
சிலரின் கண்ணீருக்காகவும்
பறிக்கப்படுகிறது என்று.?!-
அடையாளம் தெரியாதவர்களின்
அடையாளமாக அவர்களது
குறைகளே
அடையாளப்படுத்தப்படுகிறது.!-
அழகை தாண்டிய காதல்
அந்த உறவை தொடங்கச்செய்யும்
பாசத்தை தாண்டிய காதல்
அந்த உறவை வாழச்செய்யும்
அன்பை தாண்டிய காதல்
அந்த உறவை உறுதிப்பட செய்யும்
காமம் தாண்டிய காதல் அந்த
உறவை நிலைப்பெறச் செய்யும்
காதலை தாண்டிய உண்மையான
நேசமே அந்த உறவை காலம்
முழுக்க வாழச்செய்யும்..!
Happy wedding Anniversary
Amma, Appa🫰💐-
முடிகின்ற பாதைகள் ஒவ்வொன்றும்
புதிய பாதைகளுக்கான
வழித்தடங்களாகும்
நேற்று உதித்த சூரியன்
இன்று உதித்தாலும் அதே
வெளிச்சத்தை தான்
தருகிறது அதில் மாற்றம்
ஏதுமில்லை,
நேரமும், காலமும், அதன்
சுழற்சியில் மாறிக்கொண்டே
தான் இருக்கும், நமக்கான
இலக்கை வைத்து பயணித்து
கொண்டே செல்வோம்
துணையாக அன்பைக்கொண்டு.!
-
உங்களுக்கு பிடித்ததை
போல இன்னொருவர்
இருக்க வேண்டுமென
நினைப்பது தான்
ஆகப் பெரிய
வன்முறை.!-
உங்களுக்கு பிடித்ததை
போல இன்னொருவர்
இருக்க வேண்டுமென
நினைப்பது தான்
ஆகப் பெரிய
வன்முறை.!-