காத்தி கோபால்   (காரிகா🖋)
66 Followers · 59 Following

read more
Joined 8 March 2020


read more
Joined 8 March 2020

என் பேனாவிற்குள்
வந்து உறைந்து கொள்ளும்
மொத்த உரிமையும்
உனக்கு மட்டுமே
என்ற ஒற்றை காரணத்தை
என்னுள் இருக்கும்
உன் விம்பம்
மொத்தமுமாய் உணர்த்தி விடும்
எக்கனமும்.

-



உனக்காக மட்டுமே நான்
எனக்காக மட்டுமே நீ ....

சுயமாய் நீயும் நானும் கொண்ட சபதத்தில் ...
திகட்டா சாகாவரம்
நம் காதல் ...

என்றும் உனக்காக மட்டுமே

இப்படிக்கு
எனக்குள் நீயாக உந்தன் நான்...


-



தொடு வானைத் தொட்டிடனும்...
தொலை தூரம் பறந்திடனும்...
காடு மலை தாண்டி
ஊர் ஊராய் போய் வரனும்....
உச்சி கிளையமர்ந்து
இறக்கைகள் கோர்த்து
உரக்க கீச்சிடனும்.....
நீ நான் மட்டுமே போதும்
நமக்கென்றொரு
கானகமும் போதும்.....
இறக்கை விரித்து பறந்திடலாம்
நீ ! நானாய்......
நான் ! நீயாய்.....

-



வெண்கட்டியாய் மேகம் கொண்டு
வரைந்திட்டேன்
உனக்கென்றொரு
வெண் மடல் ......
வானவில் தூரிகையால்
உன் உரு வடித்திட்டேன்
காரிகையே...!
தாள் மடித்து..
நிலவிடம் தூதிடவா?
உன் கரம் சேர்ந்திடத்தான்.......


-



அடுப்படியிலும்
கருகிப் போகிறது
அவளின் கனவுக் கறிச்சட்டி!!
என்றோ ஒரு நாள்
புசித்திடத் தான் போறாள் ....
நன்றாய் ஆக்கி......!!

-



சேர்த்த உனக்கான
என் ஒவ்வொரு நொடியையும்
பொக்கிஷம் செய்திடுவேன்....
உன் வருகையின்
அந்த தினத்திலே மொத்தமாய்
பரிசளித்திட !!

-



கண் சிமிட்டும் விண்மீன்களும் ..
மெத்தையாக வெளியில்..
கொஞ்சம் சொட்டும் தூறல் மழையில்...
மொத்தமாக இருந்து ..
பேசிடத்தான் ஆசை ...
நித்தம் உன் கூட!

-



என் நிமிடங்களை
கடக்கிறாய்!
கண்ணிடை கலக்கிறாய்!
கண்ணீராய் பிரிகிறாய்!
என் மௌனத்தில் மொத்தமாய்
உன் சிரிப்பினை
புதைக்கிறாய்!
நீ யாரடி?


-



என்னவள் பற்றிய
தேடல்கள் அத்தனையும்
என்னை மரிக்கச் செய்து
அவளுக்காய் மீண்டும்
பிறந்திடச் சொல்லி
பணிக்கின்றன...
நிஜங்களின் நிழல்கள் கூட
எல்லா கனங்களையும்
அவளோடு
பகிர்ந்திடத்தான் சொல்லி
கலைகின்றன...
அவளுக்காய் அவளோடே
நானும் என் ஆன்மாவும்.....

-



நிராகரிப்புகள் ஒவ்வொன்றும்
குட்டி இடைவெளியை
உண்டாக்கிடும்!
அன்பின் பரிதவிப்பில்
மதி கலங்கி!

-


Fetching காத்தி கோபால் Quotes