சில விடயம் கிடைக்காது
என தெரிந்தும்...
தேடும் முயற்சியிலாவது
நிம்மதி அடைந்து கொள்கிறது மனம்...-
Quote and lyrics writer
For contact 9787870033
சிற்றின்பம் கொள்கிறேன்...
உன்னை சிந்தித்த இவ்வேளையில்...
சில்வண்டாய் சினுங்குகிறேன்...
உன்னை தொலைத்த வேளையில்..-
தனிமை சைத்தானின்
பெயர் சூடா குழந்தை...
நரகத்தின் ஒத்திகை...
ஏக்கங்களின் எழுதுகோல்..
காலச்சக்கரம் மறந்த பகுதி...
காலநிலையில் கோடை பகுதி..
நிலங்களில் பாலை...
நீர் நிலைகளில் கண்ணீர்..
வாழ்வியல் புத்தகத்தில்
எழுத மறந்த பக்கங்கள்...-
போதை தலைக்கேறியதாள் தான் என்னவோ..
மீள முடியாமல் தவிக்கிறேன்..
இந்த புத்தக வாசிப்பின் போதையில் இருந்து..-
நீ வாசிக்க மறந்த பக்கங்களில்...
சில வரிகள் நான்...
நீ சூட மறந்த உன்
தோட்டத்து மலர்களில்
மல்லிகை நாள்...
நீ உன்ன மறந்த உணவில் சில பருக்கைகள் நான்...
-
ஓயாது காத்து கிடக்கிறது...
இரயில் தண்டவாளங்கள்..
தன்னவள்(இரயில்) வரவை எதிர்கொண்டு ...
-
எதுவாயினும்
தொடங்குவது என்னிடம் இருக்கட்டும்..
முற்றுப்பெறுவது
உன்னிடமாய் இருக்கட்டும்...-
என் குருதியின் எச்சமே...
என்னவள் குருதியின் மிச்சமே...
ஈருடல் ஒரு உயிராய் கலக்க
வந்த பொக்கிஷமே...
என் துயர் தீர்க்க வந்த இறைத்தூதனே...
அரக்க வழிவந்த தேவனே..
பாலையில் பூத்த குறிஞ்சி மலரே...
பிறவிப் பயன் கண்டேன் இக்கணம்...
மிச்சமின்றி என் ஆயுளையும் சேர்த்து வாழ்...-