பயணம் செய்
ஆனால், யாரிடமும் சொல்லாதே...
அழகான
காதல் கதையைப் போல் வாழ்
ஆனால், யாரிடமும் சொல்லாதே...
ஏனென்றால்,
மனிதர்கள் அழகான செயல்களை
அழித்து விடுவார்கள்...
-கலீல் ஜிப்ரான்-
சிரித்து மயக்க பழகவில்லை
அழுதும் காரியம் சாதிக்கத் தெரியாது
கோபத்தில் மட்டுமே பிரியத்தை
கண்பிக்கத் தெரிந்தவன்...
கவனிக்கத் தவறியவளுக்கு
இவன் எப்போது பிழைதான்...
-rs kavidhaikal-
மை தீர்ந்து
வீசப்பட்ட பேனாவிற்காக
கண்ணீர் விடுகின்றன
கவிதையும் கைவிரலும்
கை விரலாய் நானும்
கவிதையாய் நீயும்
பேனாவாய் காதலும்...
விஷமுள்ள மனம் அதை
வீசியது ஏனோ?
-joyal-
ஆண்டுகள் பல கடந்து
ஒரு பட்டணத்து வீதியில்
உன்னவனோடு நீயும்
என்னவளோடு நானும்
எதிர்பாராது ஒரு நாள் சந்திக்கையில்...
விடைபெற்ற சற்றே தூரத்தில்
இருவர் மட்டும் திரும்ப
ஈரம் கசிய ஒரு பார்வை...
கடைசி பார்வை...
ஒருவேளை, நான் இறந்ததை
நீ அறிந்தாலோ
நீ இறந்ததை நான் அறிந்தாலோ
சொல்ல முடியாத சோகத்தோடு
ஒரு சொட்டு கண்ணீர்...
இதை தவிர
வேறு என்ன செய்ய முடியும்
இந்த ஆன்மாக்களால்...
-joyal-
சேர்ந்து வாழவும் மனமில்லை
சேர மறுத்தால், நிச்சயம் நாளை
வேறு ஒருவன் கைபிடிப்பான்
அதை தாங்கவும் மனமில்லை...
ஆயிரம் இரவுகள் மறந்தாலும்
ஒரு சில இரவு கொன்றுவிடுகிறது
உன் அழகான நினைவுகளால்...
அந்த நாட்கள்..!
நான் ஒழுக்கமாக சென்ற
ஒரே கோவில் நீதான்
என் தவறையும் மன்னித்த
ஒரே தெய்வமும் நீதான்...
எத்தணை ஜென்மம் வந்தாலும்
இனி மீண்டும் கிடைக்காது
அந்த நாட்கள்...
-
புதிக முகவரியை
வீட்டுக் கதவிலும் ,இந்த சுவற்றிலும்
ஒட்டிச் செல்கிறோம்...
சோறு தேடி வரும்
அந்த நாய் குட்டிக்கு யார் சொல்வது
நீங்கள் வீடு மாற்றியதை...-
இதயத்தில் வீசும்
தனிமை சாரல்...
ஆறுதலாய்,
கைகோர்த்து கதைபேசும்
கடிகார முள்...
-joyal-
She will never talk to
or see or fall in love with anyone...
வாசம் இல்லா பூக்கள் உண்டோ...
-joyal-
உன் பாதம் முத்தமிட்ட
மண் துகளில் மட்டுமே
நான் என்னும் விதை
மரமாகி மழைதூவும்...
-joyal-