கண்ணின் சுமை
கண்ணீர்.!
காதலின் சுமை
காத்திருப்பு.!
தாய்க்கு சுமை
தாய்மை.!
நிலத்திற்கு சுமை
நிலையில்லாததை
சுமப்பது.!
வார்த்தைக்கு சுமை
வலுவில்லாத
வாக்கியம்.!
அதே போல
மனதிற்கு சுமையான
எண்ணங்களை எடுத்து
விட்டு எழுப்பி விடு என்
ஈசனே..!-
தெற்கு சீமையில் உள்ள
தூத்துக்குடி ஆளு நான்.
எனக்குள் இருக்கும... read more
கடந்து சென்றவன்
கடலலை போல
கால்களை வருடி
செல்வது போன்ற
உணர்வு; அதுவும்
அவனை போல
கடந்து செல்கிறது;
இது தான் வாழ்க்கை
போல....-
பூவின் இதழில்
புன்னகை போல
நீ நகைக்கும் இதழ்
புன்னகையை
அள்ளி
தெளிக்கிறது.!-
அவனின் அழுகுரல் கூக்குரலாக ஒலிக்கிறது.!
செவிப்பறைகள் கிழிந்துபோக முயல்கின்றன.!
இதயம் துடிக்க மறுக்கிறது.!
அவளின் பிரிந்த காதலை நினைத்த போது.,-
உண்மை அவிழ்க்கப்படுகிறது.!
நாவினால் கொஞ்சி பேசிய
வார்த்தைகளுக்குள் மறைந்திருக்கும்
நயவஞ்சக பேச்சு அவிழ்க்கப்படுகிறது.!
நம்பிக்கையூட்டி தந்திரமாக
பலவீனத்தை அறிந்து பலமான
துரோகம் உள்ளே அவிழ்க்கப்படுகிறது.!
விழிப்புணர்வாக இருந்து கொள்..!-
உனக்கும் எனக்கும்
ஒன்று இல்லாததால் - நீ
கண்டு கொண்டாய்.!
நீயும் நானும்
ஒன்றானதால் - நீ
உரிமை கொண்டாய்.!-
இறைவன்
உனக்குள்ளும்
உள்ளான் என்று
அவளது
மழலை சிரிப்பு
நினைவுப்படுத்தி
விடுகிறது.!-