Johnson Thiviyananth   (திவ்விய ஆனந்தம்)
12 Followers · 12 Following

M.Sc ( Applied Epidemiology) (Reading)
B.Sc (Biological Science)

No Job 😌
Joined 14 September 2021


M.Sc ( Applied Epidemiology) (Reading)
B.Sc (Biological Science)

No Job 😌
Joined 14 September 2021
5 AUG 2022 AT 21:47

திருவிலாத் தீர்த்தம் தந்த
திவ்வியயேசு திருத்தலத்தில்
கருவாகிக் கதையாயானதோ
கன்னியிவள் காலச்சுவடு

பாவையின் பிறப்பில் இந்த
பாரும்கூரும்அக் களிப்பதையே
சேவையைச் சிரமேற்கொண்ட
சேக்காளி சீர்மையுறவை

வையத்தில் வைரம்பதித்து
பையாப்புநீக்க வேவந்துதித்த
பொன்மதி சிரசில்கொண்ட
வெண்பனி ஊசிமுல்லை வாழ்க

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்
இணையட்டும் இறைவனின் ஆசிகள்
கனிய-நெஞ்சில் திவ்வியன் பாசங்கள்
பனிக்க-விஞ்சையன் இயேசுவின் அருளும்

ஜீனா கிறிஸ்ரினா!
🎂

-


4 APR 2022 AT 23:09

தாமரை மலரவென சூரியன் உதிப்பதில்லை
சூரியன் உதிப்பதனால் தாமரை மலர்கிறது

அஃதுபோல்

அன்பெனும் சோடனையும் நிகர்க்குநிகர் காண்பதில்லை

முடிந்ததைக் கொடு கிடைப்பதை எடு
வாழ்க்கையின் வசந்தம் பூக்குமேமன நிம்மதியில்

-


4 APR 2022 AT 21:29

ஒரு தினத்தில் உதிர்ந்து விடுவோம் என்றெண்ணி - பூக்கள்
ஒரு போதும் மலர்ந்திட தயங்குவதில்லை

-


1 APR 2022 AT 11:27

நினைத்த பொழுதில் நினைத்ததெல்லாம்
கிடைக்குமென நினைப்பதெல்லாம் - முட்டாள்தனம்!
அதனிலுமாய் முட்டாள்தனம்,
கிடைத்த வாய்ப்பை விரயமாக்கி
இழப்பதுதான் உணர்வீரோ?

-


25 MAR 2022 AT 22:27

மனமெனுமண மேடையில்
தினமொருவண்ண ஆடையில்
வனவளவிந்தை துணையிவள்
தனமிகுஎந்தை தாயிவள்

மான்விழிபெற்ற மானிடள்
தேன்மொழிஉற்ற தேனுடல்
ஊன்உடல்மேவும் உளத்துடள்
வான்உலகீந்த பழமிவள்

எந்தை பாதி இவள்!

-


9 MAR 2022 AT 6:45

மௌனமாக மரணத்தை நோக்கி
வீறுநடை போடுகின்றேன்
அங்கு காதலை நிரூபிப்பேன்
ஆனால் காதலன்யான் அரூபியாவேன்

நின்
வெஞ்சினத்தில் வெளியாகி என்
பிஞ்சுநெஞ்சைக் காயம் செய்த
கருத்துக்களுக்கு புள்ளி வைக்க என் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளியிடுவேன்

-


26 FEB 2022 AT 11:46

துணி தூய்மையாக வேண்டுமானால்
துவைக்கப் பட்டுத்தானாக வேண்டும்

பொன் புனிதமாக வேண்டுமானால்
புடமிடப் பட்டுத்தானாக வேண்டும்

வாழ்க்கை வசந்தமாக வேண்டுமானால்
கட்டுப்பாடு இருந்துதானாக வேண்டும்— % &

-


26 FEB 2022 AT 10:13

ஏண்டா!
உங்களோட எதிர்காலம் வளமாக அமைய
நான் காயப்பட வேண்டும் என்று விதியா?

என்னோட கட்டுப்பாடு உங்களுக்கு கசக்குதில்ல
போயி சமூகம் என்கிற கட்டுப்பாட்டோட மோதி
களைச்சு போய்
அவமானப்பட்டு
ஏமாந்து
எள்ளிநகையாடப்பட்டு வாங்கடா

அப்போ புரியும் என்னோட கட்டுப்பாடு
சுமையா
சுகமா எண்டு

ஒண்ட நினைச்சுக்க
நான் திவி
உங்களோட விதி
அது என் கையில தான்
☣️☢️⚠️— % &

-


16 FEB 2022 AT 6:43

கற்பனையெனும் கனவில் - உன்
அணைப்பிலேயே தினமும்

காத்திருக்கிறேன் காலம் வழிவிடும் அக்கணப்பொழுதை....


அப்புறம்.... 🤔🤔🤔— % &

-


16 FEB 2022 AT 6:40

கதிரவன் வரவை ஆவலாய் நோக்கும் தாமரை ஏக்கம் காதலின் தொடக்கம்

காதலி விழிதிரை விலகிடும் கணத்தை வாஞ்சையாய் பார்க்கும் காதலன் கண்மடல்

இனிய காலை வணக்கம் என் காதலி
இந்த நாள் நிறைவு தரும் நாளாக அமைய எம் இறையவனை இறைஞ்சுகின்றேன்
😘— % &

-


Fetching Johnson Thiviyananth Quotes