ஜீவந்த்   (ஜீவந்த்)
710 Followers · 104 Following

ஜீவிதா நவநீதகிருஷ்ணன்
Joined 25 May 2018


ஜீவிதா நவநீதகிருஷ்ணன்
Joined 25 May 2018
15 FEB AT 12:58

கனவுகளை காற்றோடு
கரைத்து விட்டு
கடமைகளில் மூழ்கியே
கிடைத்ததை வாழ்ந்து விட்டு
விதியின் பெயரிட்டு
நானும் இவ்வாழ்க்கையில்
தொலைந்து விடவா பலரைப் போல.....

- ஜீவன்மொழி

-


10 OCT 2024 AT 1:19

குழந்தையாய் தவழ்ந்து
பறவையாய் திரிந்தோம்
பாசத்தின் வலையில்
பண்பட்டு வளர்ந்தோம்
பந்தங்களை பகிர்ந்து
சொந்தங்களாய் சேர்ந்தோம் !

ஆயா தாத்தா வீடு
சொல் மட்டும் ஆனதே
அன்பும் கம்பீரமும் கரைந்தே போனதே
வெறுமையும் சேர்ந்தே வெறிச்சோடி போனதே !

நிகர் இல்லா நினைவுகள் பல பல
கண்முன்னே வருதே கண்ணீரும் தருதே.....

வருந்தினாலும் நீங்கள் தந்த அன்பு
வாழ்க்கைக்கு நன்றி கூறி வணங்குகிறோம்
என்றும் உங்கள் நீங்கா நினைவுகளுடன்....



- ஜீவி

-


16 JUN 2024 AT 12:58

சிறிய உரையாடல்
நிறைய புரிந்துணர்வு

அலட்டிக்கொள்ளா பாசம்
ஆழம் கடந்த நேசம்

கைவிரல் பிடிப்பதில்லை
கை விடுவதும் இல்லை

எங்கள் உலகம்
எல்லைகள் இல்லாதது ...


- ஜீவன்மொழி

-


9 DEC 2023 AT 6:14

அவள்
அவளுக்கென ஒரு வண்டி
அவளுக்கென ஒரு பாதை
அவள் கனவுகளுக்கு வாயில் !!

-


5 JUN 2023 AT 18:24


ஆர்பரிப்பிக்கும் அமைதிக்கும் இடையே அலைபாயாமல் நடுநிலையாய்
பயணிக்க தேவைதான்
நெடியதோர் புரிந்துணர்வு


உன்னைப் பற்றி !

-


21 AUG 2022 AT 23:14

பக்கத்து வீட்டின்
சூழ்நிலை படமாய்
ஓடுகிறது மனக்கண்ணில் !!

-


8 AUG 2022 AT 14:51

We are running towards
a point which
meet all our expectations !
But in reality
There is no such place !!

- ஜீவந்த்

-


4 FEB 2022 AT 23:15

மாற்றங்கள் நிரந்தரம் என்றாலும்
மாற்றமில்லாமல் கடத்தி வரும்
வழக்கம்
பிறந்த வீட்டிலேயே
பெண் விருந்தாளியாவது !!— % &

-


2 FEB 2022 AT 23:40

என்னையே
மறந்து போகிறேன் முழுவதுமாக !!— % &

-


29 JAN 2022 AT 14:51

உறவுக்குள் வரும்
பிரிவும்
ஒரு புதிய உறவின்
வரவால்தான் !!— % &

-


Fetching ஜீவந்த் Quotes