வெகு நாட்கள் உன்னை
காணாமல் - என் கண்கள்
மரணித்துவிட்டது!
உன் திடீர் வருகையால்
கண்கள் உயிர்பெற்று - என்
வார்த்தைகள் மரணித்துவிட்டது!!!-
ஏனோ தெரியவில்லை!!!
பத்து நாள் பழகியவனுக்கு
பத்து வினாடி
என் முகவாட்டம் பதற்றத்தை
ஏற்படுத்துகிறது!!!
காதலா???
கடமையா???
உரிமையா??? தெரியவில்லை!!!!
இருப்பினும் அவனது பதற்றம்
பிடிக்கத்தான் செய்கிறது!!!♥
-
வண்ண விளக்குகளுக்கும்
வெட்கம் வந்தன!!!!
உந்தன் விழி பார்வையால்!!!!-
மெல்ல சாகிறேன்....
உன்னோடு சேர்ந்து
பயணித்த பாதைகள் - என்னை ஏளனமாய் பார்த்து;
எள்ளி நகையாடுகின்றன!!!
இந்த குற்றவுணர்ச்சியில்
மெல்ல சாகிறேனடா!!!!
-
Tattoo
அவனின் அவள்
என போட
ஆசைப்பட்டு!
எவனோ ஒருவன்
என போட வைத்தது!
காதல் ஒரு சாபம்-
சாதி, மத, கெளரவத்திற்காக
காதல் கருக்கழைப்பு
செய்வோர்!
அவர்தம் கடவுளின்
பெயர்களை கூட
செவிமடுக்க தகுதியற்றவர்களே!
-
பாதைகள் முடிந்தாலும்
பயணங்கள் முடிவதில்லை!!!
அதுபோல்.....
காதலர்கள் பிரிந்(த்)தாலும்
நினைவுகள் பிரிவதில்லை!!!
-
உன்னை மறக்க
நினைக்கும்
பேதை மனதிற்கு!!!
மௌன அஞ்சலி
செலுத்தியபடி
நான்!!!-
பற்றி எரியும் தணல்களுக்கு
காதலை இரையாக்கி
எப்படியோ!
சாதியை காப்பாற்றிவிட்டேன்..!!!
-