ஜெயகாந்தன் ஜீவரத்தினம்  
6 Followers · 24 Following

Joined 24 October 2019


Joined 24 October 2019

முட்டாள்கள் எப்போதுமே
தனக்கு தானே அறிவாளி பட்டம்
சூட்டிக்கொண்டு, வாயை மட்டுமே மூலதனமாக்கி கத்தி கதறியே கடைசியில் வீழ்ந்து போவார்கள்...

-



டுபாக்கூர் மீம்ஸ்...

ராமு: ஏன்டா தம்பி.. உன் பக்கத்து வீட்டுக்காரன் , அவனுக்கு மட்டும் தான் எல்லாம் தெரிஞ்ச மாதிரி போற வரவன்கிட்டலாம் காட்டு கத்தல் கத்தறானே.. அம்புட்டு பெரிய அறிவாளியா அவன்?

சோமு: யோவ் நீ வேற.. நா கூட ஆரம்பத்துல இவன பெரிய அறிவாளினு தான் நெனச்சுட்டேன்.. அப்புறம் தான் தெரிஞ்சுது சரியான கிரிமினல் டுபாக்கூர்னு.. அவனுக்கு "அ " எழுதவே அரை நாள் ஆகும்.. ஆனா ஆக்ஸ்போர்டு ரேஞ்சுக்கு பில்டப் பண்ணுவான் யா.. அதை மறைக்கத் தான் இவ்ளோ கத்தல்... கதறல்... குறைகுடம் கூத்தாடத்தானே செய்யும்....

-



அது ஏனோ
தெரியவில்லை....

நான்கு சுவருக்குள்
வக்கிரத்தை
காட்டுபவர் எல்லாம்
பொதுவெளியில்
யோக்கியனைப்
போலவே
நடிக்கிறான்...

அன்று சிலர்
இன்று பலர்...

-



சிலர்
தனக்குரிய பணியில்
காமெடியனாகி
பிறரை
வில்லனாய் காட்டுவதில்
ஹீரோவாகி விடுகிறார்கள்..

அவர்களுக்கு ஏனோ
புரிவதே இல்லை...
அடுத்தவனை அழிக்க
நாம் ஆறடி குழியை
தோண்டினால்
நம்மை அழிக்க
பதினாறு அடி குழியை
தயாராய்
வைத்திருப்பான் கடவுள்...

-



எவனொருவன்
தனக்குரிய பதவியை
பிறருக்கு தீங்கு விளைவிக்கவும்,
பழிவாங்கவும்,
தான் என்ற ஆணவத்தை
வெளிக்காட்டவும்,
கையாடல் செய்யவும்,
பயன்படுத்துகிறானோ

அவனே தனது தரமற்ற குணத்தால்
தாழ்ந்தவனாகிறான்...

-



லஞ்சமும்
கமிஷனும்
பிச்சையை விட
தாழ்வான செயல்...

அதைச் செய்பவன்
பிச்சைக்காரனைவிட
தாழ்வானவனே..

-



கை இருக்கிறது
என்பதற்காக
தனக்கு கீழானவனை
அடித்துக் கொண்டே
இருக்கலாம் என்று
நினைக்காதே...

நீயும் திருடன் தான் என்பதை
இனி உலகறியும்..
அன்று
உனக்கு செருப்படி
நிச்சயம்.....

-



தான் செய்யும் தவறுகள்
பிறர் அறிய மாட்டார்கள்
என நினைப்பவனே
உலகின்
ஆகச் சிறந்த
அடிமுட்டாள்....
பதவியின் ஆணவத்தில்
பதுங்கிக் கொண்டு
வெளியில்
புனிதர் வேடமிடும்
கமிஷன் கருங்காலிகளே...
இனியாவது உங்கள்
உச்சரிப்பின் தொனியை
மாற்றிக் கொள்ளுங்கள்...

(சில அரசியல் வியாதிகளுக்கு)

-



நேர்மையற்றவர்களின்
அறிவுரைகள்
விழலுக்கு இரைத்த
நீர் போலவே....
பயனேதும் இருப்பதில்லை....

-



தரமான மனிதர்கள்
எப்போதும்
தனிமனித தாக்குதலையும்
தரம் தாழ்ந்த விமர்சனத்தையும்
விரும்புவதுமில்லை..
செய்வதுமில்லை...

-


Fetching ஜெயகாந்தன் ஜீவரத்தினம் Quotes