j€¥@ ❤️   (j€¥@)
96 Followers · 23 Following

j€¥@
Joined 12 May 2018


j€¥@
Joined 12 May 2018
18 MAR AT 6:29

பெரிய துரோகங்களுக்கு பின்னாலும் சிலரது அற்ப சந்தோசங்கள் ஒளிந்து கிடக்கிறது..

-


18 MAR AT 6:25

உறவுகளிடம் உள்ள நல்ல பழக்கம்
ஆற முற்படும் காயங்கள் மேல் மிளகாய் தடவி
எரிச்சல் ஊட்டும்
பெருவாரியாக நம் மனதை சங்கடபடுத்துவது...

-


12 DEC 2024 AT 10:53

விலகி இருக்கதான்
விரும்புகிறார்கள் என்றானபின்,
விளக்கம் தேடுவதும் நேர விரயம்..

-


7 DEC 2024 AT 16:37

Where they provoked me

-


7 DEC 2024 AT 15:59

அவளை சண்டையில் தோற்கடிக்க
பெரிதாக மெனக்கெட விரும்பவில்லை
அவளின் நடத்தையில் இன்றும்
குற்றம் காணும் கலியுக வீரர்கள்...

-


30 NOV 2024 AT 14:35

தேரோட்டி மகன் என்றால் ‌
கேவலம்.
பார்த்தசாரதி என்றால்
பெருமை.

-


29 NOV 2024 AT 8:55

எனக்காக என்று புதிதாக
எதுவும் செய்ய வேண்டாம்,
எங்கு தொடங்கியதோ
அங்கேயே விட்டு விடுங்கள்...
அங்கும் காயமும், கஷ்டமும்
இருக்கத்தான் செய்தது
ஆனால் ,
இத்தகைய ரணமாக
வலிக்கவில்லை...

-


29 NOV 2024 AT 3:15

கடல் முழுக்க தண்ணீர்,
எதை தேடியோ
அலைகளோடு
போட்டி போட்டபடி
மனதின் பற்றாக்குறை.



-


29 NOV 2024 AT 2:54

எல்லாம் நிறைந்து இருக்கிறது,,,
இருந்தும்,
எதுவுமே இல்லாத வானத்தை
பார்த்து ஏங்கியது மனம்...

-


29 NOV 2024 AT 2:43

நமக்குள் கசந்து போனதற்கு,
அன்பு இல்லாமல் போனதால் அல்ல, உன்னுடைய புரிதலும்,
என்னுடைய புரிதலும்
வெவ்வேறாக இருந்ததை
புரியாமல் போனதால்...

-


Fetching j€¥@ ❤️ Quotes