People :What is the best gift
he has ever given you?
Me. : Hatred-
Bibliomanaic
Rain Seeker
Krishna's Girl
என் அதீத பேரன்பை
கேள்வி கேட்கவும்
அதன்மீது
கருத்து சொல்லவும்
அதைக்கொன்று
புதைத்த உனக்கென்ன
உரிமையுள்ளது.?
என் பெருநேசத்தோடு
உன் உரிமைகளும்
புதைக்கப்பட்டுவிட்டன.-
நீ எவ்வளவு
முக்கியமென்ற
கேள்விக்கு
பதிலில்லை
என்னிடம்..!!
உன்னுடன்
ஒப்பிடவே
எவருமில்லை
எனும்போது
எவ்வளவென்று
எப்படி அளப்பது?-
வார்த்தைகள்
மதிப்பிழந்தால்
மௌனமே சரி..!
அன்பு
மதிப்பிழந்தால்
தள்ளி நிற்பதே சரி..!
காத்திருப்பு
மதிப்பிழந்தால்
நகர்ந்து விடலே சரி..!
உயிர்நேசம்
மதிப்பிழந்தால்
மற(றை)ந்துவிடலே சரி..!-
நான் காணாமல்
போனதே
நீங்கள் கவனிக்க
மறந்த நொடியில் தானே..!!
பிறகு தேவைப்படும்போது
நினைவிற்கு வந்து
தேடி என்ன
செய்யப் போகிறீர்கள்?-
அவனுடனான
பேருந்துப் பயணங்களில்
வழக்கமான ஒன்றான
ஒரே இருக்கையில்
அருகருகே அமர்ந்து
தோள் சாய்ந்தபடி கதைபேசிட
ஆசையில்லை...!!
அவன் கைகள் இறுகப்பற்றி
அவன் மேலே சாய்ந்து நின்று
அவனுக்குள் பாதுகாப்பாய்
ஒளிந்து கொண்டு
அத்தனை கூட்டத்திலும்
அவனை மட்டும் நினைவில் நிறுத்தி
நாங்கள் மட்டுமான உலகம் தோன்றி
நீண்ட நொடிகளாய் நகரும்
பயணங்களாய் வேண்டும்...!!!-
கூர் விழி அதனுள் காதல் நுழைத்து
நேர்ப்பார்வை பார்க்கிறாய்..!
உயிருக்குள் கூசிச் சிலிர்த்து
உறைந்து நிற்கிறேன்..!
நேர்ப்பார்வையில் நேசச் சாரல்
வீசும் புயலாய் நிற்கிறாய்...!!!
......
பார்த்தது போதும் நிறுத்திடு;
நின்று துடிக்கிறதென் இதயம்
கொஞ்சம் காப்பாற்றிடு..!-
"ஒருவேளை அவனும்
எனை நேசித்திருந்தால்???"
....
என்ற கற்பனையில்
நகரும் இரவுக்குத்
தெரியும்
இல்லாத இடத்தில்
தொலைத்ததைத்
தேடும் முட்டாளிவள் கதை.-