காதலை இறைவன் படைத்தானோ?
காமத்தை அசுரன் படைத்தானோ?
மோகத்தைப் படைத்தவன் எவனோ...
இன்னும் மீளாமல் கிடக்கிறானோ?-
சிரித்து சிரித்து பேசியருப்பாள், -"நீ
பேசும் போதெல்லாம் சிலிர்த்தது" என்றுருப்பாள்....
சிறிது துன்பம் என்று நீ தேடும் போது,
சிக்காமல் பறந்திருப்பாள்.-
காதலுக்கு இனமில்லை , மொழியில்லை , நிறமில்லை என்பார்கள்......,
காதலுக்கு இனமில்லை , மொழியில்லை , நிறமில்லை என்பவர்கள் - முட்டாள்கள்!
காதல் அனைத்தையும் பார்க்கிறது,
ஏனோ - இன்னும் கருணை மட்டும் பார்ப்பதில்லை.
-
ஒரு மாணவனின் கேள்வி?
மருத்துவ படிப்பை புனிதமாக்கி,
மருத்துவ தேர்வை கட்டாயமாக்கி...
சிறு பிஞ்சுகளை பலியாடாக்கி,
அரசியல் நோக்கத்தை நிர்பந்திக்க
நீங்கள் நடத்தும் சூதாட்டத்தில்,
உருட்டப்படும் தாயம் நாங்கள் தானோ?-
காதல் கற்பித்த உன் விழியிலும்,
காற்றில் ஊஞ்சலாடும் குழலிலும்;
அமிர்தம் போல் ருசிக்கும் இதழிலும்,
அவ்வப்போது மறைக்கும் இடையிலும்;
பள்ளத்தாக்கு போல் சருக்கும் கழுத்திலும்,
பார்க்காமலே போன வளைவுகளிலும்;
மூடி மறைந்துள்ளதோ- என் மோகம்?
என்று நினைத்தேன்...
சற்றென்று நீ திரும்பி நாணத்தில் பார்த்தவுடன் ...
பட்டென்று எரிந்தேனடி மோகத்தில் நானும்!-
Some people ask......
"What's so special in you Guys?"
We say..."Everything!"-
To 4 years of Friendship and Love,
To 4 years of Fights and miseries,
To 4 years of Surprises and Fun,
To 4 years of Medico to Doctor,
To 4 years of Me to Us,
To 4 years of being a Family.
Happy Batch Day AX
All for One and One for All !-
அருமை தெரியவில்லை , அருகில் நீ இருக்கையில்-
கருணை வேண்டினேன் சற்று நீ விலகையில்!
இன்றோ கெஞ்சி கேட்கிறேன் காலத்திடம் ஒரு பிச்சை -
இச்சை உள்ளவரையாவது மிச்சம் வை எம் நட்பை!-