இதற்கு தான் பயந்தேன் நான்
இனியும் வலி தாங்கும் வலிமை
இந்த இதயத்திற்கு இல்லை....
பேசினால் பிரிவு வரும்
என்றிருந்தால்....
பேசாமலே இருந்து விடலாம்
இனி நான்....
-
காயங்கள் ஆற....மருந்தல்ல கிடைப்பது..
மீண்டும் காயங்களே....
வலிக்கு நிவாரணம் கிடைக்கும் முன்னே
வழிகிறது இரத்தம்...
அணைத்துக் கொள்ள தான்
முடியவில்லை இன்னும்...
அருகிலேனும் இருக்க கூடாதா...
எதையும் காணாது
விழிகளை தாழ்த்தி விடலாம்...
இதயம் கனக்கிறதே...
இமை மூட முடியாமல்.....
-
நீ இன்றி உயிர் துடித்தேன்
என்று சொன்னால்
விழி துடைத்து விடு....
உயிர் வலித்திடும்
வார்த்தை ஏனோ... உயிரே...
-
யாரும் யாருக்கும் முக்கியமில்லை...
பிரியமானவருக்காக காதல்
காத்திருப்பதும் இல்லை....
நேசிப்பவரின் கண்ணீர் துளிகள்
நேசமிக்க இதயத்தை நனைப்பதில்லை
குளிரிலும் இருளிலும்.... சுடும்
தனிமை நாட்கள்....நகர்கிறது...
வெறுப்பாய்...... வெறுமையாய்....-
நீ இன்றி ஒரு வாழ்க்கை இல்லை...
உனை நீங்க எந்த
வேண்டுதலும் இல்லை....
மாதம் கடந்து... வாரம் கடந்து
நாட்களும் கடந்து... நிமிடங்களை
எண்ணி கொண்டு இருக்கிறேன் நான்
நீ தொட்ட விரல்களின்...
நகங்களை கடித்து கொண்டு...
மொட்டு உடைவது போல்
இந்த தயக்கமும் பயமும்
உடையும் அந்த நொடிக்காக....
வானின் முதல் மழை துளி போல்
ஆரம்பிக்கும் வார்த்தை ஒன்று
கிடைக்கும் அந்த நொடிக்காக...
இரவு முழுவதும் இதயம் பேசியதை
விடிந்ததும் இதழ்கள் பேசும்
அந்த நொடிக்காக...
காற்றல்ல கடந்து போவதற்கு...
சுவாசம் நீ....உனை நீங்கி
வாழ்தல் சாத்தியமா....?
-
நீண்ட பயணங்கள் எதுவுமே
இல்லை....நீ இன்றி
இந்த பயணமும் உன்னோடு தான்...
நீல வானமாய்...நெடும் பாதையாய்
வழிந்திடும் கண்ணீரை
துடைத்திடும் தென்றலாய்....
அனைத்துமாய் நீயே....
ஒரே நாளில் உன்னிடம் மீளும்
பயணம் தான்... எனினும்
உன் சப்தங்கள் இன்றி....
மனம் மௌனித்தே நகர்கிறது....
-
இதழ்களில் சிரிப்பையும்...
இமைகளில் கண்ணீரையும்
ஒரே நேரத்தில் தர
உன்னால் மட்டுமே முடியும்...
உன் விரல் பட்ட எழுத்துக்களை
உன் குரல் கொண்டு கேட்கிறேன் நான்
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றையும்
இமை வழியே இதயத்தில் சேமிக்கிறேன்
ஏதேனும் ஒரு விடியலில்
உன் காலடியில் சமர்ப்பிக்க....-
உன் நினைவுகளை உறங்க வைக்க
சற்றே கண் அயர்கிறேன்...
மூடிய விழித்திரை முழுவதும்
உன் பிம்பம்....பிடித்து விடவே எண்ணி விரைந்து கை நீட்டி தேடுகிறேன்...
இல்லை.... கிடைக்கவில்லை நீ
கண்ணீர் கண்களை நிறைக்க
சட்டென விழிக்கையில்....
அறை முழுவதும்.... நிறைந்திருக்கிறது
உயிரே.... உன் வாசனை....❤️
-
நம் முதல் சந்திப்பில் இருந்த
அதே சூழ்நிலையில் நான்....
தவித்து கிடக்கிறேன்...தனியே... எனினும்
கொட்டும் மழையில்...எனை காக்கும் இலையாய்.... கடும் வெயிலில்
நிழல் தரும் கிளையாய்...
இந்த அடர்ந்த குளிரில்...
அணைக்கும் கரமாய்....அனைத்துமாய் நீ.
கை கோர்த்து இருக்கவில்லை தான்
எனினும்.... கண் முழுவதும் நிறைந்தே
இருக்கிறாய்.... கண்ணீராய்....💦
-