மனிதன் பித்தம் பிடிப்பதால்
கவிஞன் ஆகுகிறான்
கவிஞன் பித்தம் பிடித்ததால்
மௌனம் ஆகுகிறான்-
உன் கனவுக்காக
நித்தம் உழைத்திடு
வெற்றி அடையும்
வரை முயன்றிடு
உன் கனவை
போராடி அடைந்ததும்
கனவிலும் காணாதெல்லாம்
உன்னை சேர்ந்திடும்-
நீண்ட நாடக நாட்களிடையே
ஓரிரவு சிறிய ஓய்வு
உண்மை முகம் காட்ட
ஏங்கியது களைத்த நெஞ்சம்
கன்னம் உரசி அனைக்க
அருகில் யாரும் இல்லாததால்
கண்கள் ரகசியமாக அனைத்திட
கண்ணீர் கன்னத்தை முத்தமிட்டது-
இறப்பதற்கு ஒரு நொடி முன்பாவது
துயரம் எல்லாம் தீர்ந்திடுமா
இன்னலற்ற சுவாசத்தை ஒரு நொடியாவது
சுவாசித்து உணர்ந்து இறந்திட-
அழகைக்கூட்டும் வெட்டப் படாத நகம்தான்
சிலநேரங்கலில் தேவையற்ற காயத்தை ஏற்படுத்தும்
தேவையான கவணம் வேண்டும்
எது தேவையில்லை என்பதிலும்-
மலையானது மணல் ஆகும் வரை
உடைந்துகொண்டே இருக்கும்
மனமானது மண்ணில் அடையும் வரை
உடைந்துகொண்டே இருக்கும்
இழப்பதற்கு அடுத்த என்ன என்ற
எண்ணத்திலே நாட்கள் நகர்கிறது
இன்னும் என்ன என்ற சோர்வோடும்
ஏக்கத்தோடும் அச்சத்தோடும் நகர்கிறது-
நாட்கள் கடந்தும்
மனம் தேறவில்லை
என் தந்தையும்
யாரையும் தேடவில்லை
நாளும் அவரும்
நானும் அவதியில்
தனிமையில் அவர்
நம்பிக்கையில் நான்
எண்ணற்ற குழப்பங்கள்
என்ன செய்வதென
தெரியாமல் நான்
திசையெல்லாம் தவிக்கின்றேன்
அவள் அன்பின்
இழப்பால் பெற்றது
இன்னல் மட்டுமன்றி
அனுபவமும் ஞானமும்
தாயின் இழப்பையும்
தந்தையின் தியாகத்தையும்
கடந்து கடமை
உணர்ந்து நிற்கின்றேன்
வலிகள் இருக்கட்டும்
வழிகள் பிறக்கட்டும்
அவள் சென்றுவிட்டாள்
நான் மாட்டிக்கொண்டேன்-
Finding happiness and peace
In each and everyday in My life
Is like a corner in a circle-
பிறந்தநாள் முதல்
இன்றைய நாள்வரை
இழந்தவை எண்ணற்றவை
மீதம் உள்ளவை
ஒன்றோ இரண்டோ
இவையும் நீங்கும்
நாள் எந்நாளோ
என்ற அச்சத்தில்
ஒவ்வொரு நாளும்-