Its_Dhamu!   (Its_dhamu!)
47 Followers · 8 Following

Not a writer!! I'm just experienced!!!
Joined 14 April 2018


Not a writer!! I'm just experienced!!!
Joined 14 April 2018
23 JAN AT 4:52

மது x மாது

துணை கொண்ட ஒன்று பறித்துச் செல்லும் உறக்கத்தை
துணையற்ற ஒன்று மீட்டுத் தந்து துணை நிற்கும்!

-


17 JAN AT 0:12

All of a sudden,
3 lines knocked my mind

If it was the past
which decided the future already
then what the ffkk the present is for!?

Alarming
Awakening
Absolutely disturbing

-


22 DEC 2024 AT 23:36

ஏனோ தெரியவில்லை,
அவ்வப்போது அவளை வெறுப்பேற்றியும் விளையாடிட தோன்றுகிறது,
அவளை நித்தமும் கொஞ்சத் துடிக்கும் எனக்கு
அவளிடம் கெஞ்சும் வரமாவது கிடைக்கும் என்பதால்!

-


8 DEC 2024 AT 18:44

கொடுத்து மட்டுமே பழகி விட்டேன்,
அதனால் தானோ என்னவோ,
எப்படி கேட்டால் கிடைக்கும் என்றும் தெரியவில்லை,
அளவின்றி கிடைக்கையில்,
எப்படி மதிப்பது என்றும் தெரியவில்லை -
அன்பின் அலையை!

-


2 DEC 2024 AT 20:32

என்னவள்!

-


1 DEC 2024 AT 22:02

கல்நெஞ்சம்!

-


30 NOV 2024 AT 15:34

ஒரே ஒரு வார்த்தை,
ஒரே ஒரு ஓரப்பார்வை,
ஒரு யுகம் வாழ அதுவே போதும் என்று
ஏங்கிக் கிடந்த காலங்கள் கணக்கிலடங்காது;

தவறி வந்த வார்த்தையும்,
ஓர் நொடிப் பார்வையும் மட்டும் போதும்,
அடி நீங்காது - நொடி நில்லாது
அவள் வேண்டும் என்று கதறத் தொடங்குகிறது,
கள்ளிமேல் வந்த காதலால் கரைக்கப்பட்ட
பேராசை கொண்ட எந்தன் கல் நெஞ்சம்!

-


28 NOV 2024 AT 0:46

சில மணி நேரம் மட்டும் பயணித்து விட்டு,
சற்றும் தயங்காது பிரிந்து சென்ற,
பாவைகள் பலரையும் சொல்கையில்,
கள்ளக் கோபம் கொண்ட கள்ளியவள்;

அவளின்றி அனாதையாய் திரிந்த என்மேல்,
அளவற்ற அன்பை கொட்டித் தீர்த்த ஒருவளிடம்,
தேக்கி வைத்த அன்பினை, தேவையின்றி கொட்டியதை,
கள்வன் நான் கூறியவுடன் கலங்கி நின்றாள்;

என்னவள் எண்ணங்களில், என்னை நிரப்பிய நானே ஏமாற்றிவிட,
என்செய்வேன் ஏமாற்றியதற்குப் பின்!?

-


3 NOV 2024 AT 17:11

நான் உன் அடிமையே!

-


1 NOV 2024 AT 17:10

ஆணும் கர்பமாகிறான்!

மீளாதுயரத்தில் வாடும் மன்னவனை,
அளவில்லா அன்போடு,
ஆதரவற்றவனை அணைத்து,
புதைந்த புன்னகையை பிறப்பித்து,
சிதைந்த சிறுவனின் சிகை கோதி,
உரைந்த நெஞ்சமதில், அன்பை ஊற்றி,
தேக்கி வைத்த காதல் நதியை உடைத்திட்ட,
அவள் ஓரப்பார்வை ஒன்றில்;

ஆணும் கர்பமாகிறான்,
காதல் என்னும் குழந்தையை,
மனக்கருவில் சுமக்க தொடங்கிய கணம் முதல்!

அக்குழந்தை பிறப்பதும் இறப்பதும்,
அக்கருசுமப்பவன் கைகளில் இல்லை;

அன்பை தேக்கி வைத்த, கள்ளவனின் மன அனையை,
கண்பார்வை ஒன்றால் கல்லெறிந்து உடைத்து,
காதல் வெள்ளத்தை வரச்செய்த கள்ளியின் கைகளில் மட்டுமே!

-


Fetching Its_Dhamu! Quotes