இரவி ராகுல்   (புதியவன் ரவி ராகுல்)
97 Followers · 21 Following

சுவாசத்தில் சுமைகளை அல்ல தமிழ் எனும் சுகத்தை சுமக்கும் இளைய பிள்ளை....
Joined 8 August 2018


சுவாசத்தில் சுமைகளை அல்ல தமிழ் எனும் சுகத்தை சுமக்கும் இளைய பிள்ளை....
Joined 8 August 2018
23 DEC 2021 AT 12:52

ஆற்றுப்படுத்த முடியாத துயரத்தை ஒரு மரணம் தந்து விடுகிறது.
நினைவுகளை அசைபோடும் ஓர் உறவின் மரணம் எத்தனை திடகாத்திரமான உள்ளத்தையும் உடைத்து விடும் உளியாகி விடுகிறது.
அப்படியான மரணத்தின் வலியை இன்னொருவருக்கு கடத்தி விட்டு போகும் தைரியம் இந்த தற்கொலை செய்பவர்களுக்கு மட்டும் எங்கிருந்து வருகிறது!?!

-


23 DEC 2021 AT 12:47

ஆற்றுப்படுத்தும் முயற்சியின் இறுதியில் இறுக்கப் பற்றி இருந்த கரத்தின் பிடியை தளர்த்தும் நொடியில் ஆற்றுப்படுத்தலுக்கான தேவை நம்மை ஆட்கொண்டு விடுகிறது. இப்போது நாமும் ஆறுதலுக்கான இடத்தை தேடிய அலைய வேண்டும். எப்படி நம் பிடியை தளர்த்தி விலகும் போது அவர்களுக்கும் ஆற்றுப்படுத்தல் அவசியமாக கூடும். ஒருவரை ஒருவர் பற்றிக் கொள்ளாமல் எப்படித்தான் இந்த வாழ்க்கையை கடப்பது!
யாரையாவது பற்றிக் கொள்ளுங்கள், உங்களை பற்றிக் கொள்ளவும் வாய்ப்பு தாருங்கள், அவ்வளவே வாழ்தல்!

-


23 DEC 2021 AT 12:42

ஒரு கணத்தில் எல்லாம் மாறி விடுகிறது.
ஒரே ஒரு சொல்,
சொற்கள் அற்ற வெறுமை,
பற்றிக் கொள்ள யாருமில்லாத தனிமை,
இப்படியான தருணங்கள் உயிர் உலுக்கி வெளியே எறிந்து விடும் நோக்கத்தோடு சூழ்ந்துக் கொள்ளும் போது ஒரு கணத்தில் எல்லாம் மாறி விடுகிறது. உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் கூட தோன்றி மறைகிறது. அவ்வாறான தருணங்களை எப்படி கடப்பது என்பதே வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் வாழ்க்கையை கொண்டு செலுத்தும் அனுபவத்தை தர வல்லவை.
பற்றிக் கொள்ளுங்கள், உடன் இருப்பவர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் வாரி அரவணைத்துக் கொள்ளுங்கள். அழுகை வரும் அரவணைத்துக் கொள்ளும் ஆட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில், ஒரு கணத்தில் எல்லாம் மாறி விடுகிறது!

-


16 JUN 2021 AT 23:41

அக்கறையோடு உதிர்க்கப்படும்
சிற்சில சொற்களே
உயிர்த்திருக்க செய்கிறது!

-


16 JUN 2021 AT 23:20

எந்த ஒரு நாளும் மோசமானதாக துவங்குவதில்லை
ஒருவேளை மோசமான நாளாக முடியக்கூடும்
அந்நாளும் கூட அடுத்த நாளுக்கான அனுபவங்களையே விட்டுச் செல்லும்!
ஆக எல்லா நாளும்
நன்னாளே!

-


10 JUN 2021 AT 22:19

மெல்ல நகர்ந்து சென்றால் என்ன
முன்னோக்கி தான் செல்கிறோம் என்பதை மட்டும் உறுதிப்படுத்த கொள்ளுங்கள்
அது போதும்!

-



ஊழிக்காலம்

எதுவும் முன்பிருந்து போல் இல்லை
இதற்கு முன்பும் அப்படி தானே காலம்
நகர்ந்தது
இப்போது சற்றே அச்சமூட்டி பார்க்கிறது
நடுங்கி என்ன பயன்
அது நகரும் வேகத்திற்கே நகரும்
காத்திருங்கள்,
இதுவும் கடந்து போகும்!

-


31 MAY 2021 AT 23:59

அந்தி மாலை தேனீர் சந்திப்புகள்
யாருமற்ற தெருமுனை உரையாடல்கள்
நகைத்து கடந்த பகடிகள்
சூழல் மறந்த உரையாடல்கள்
வார்த்தையற்ற மௌனங்கள்

எழுதப்படாத கதைகள் கதைக்கும் கதைக்களங்கள்!

-


31 MAY 2021 AT 23:27

பேரன்பு ஒன்றே இப்பிரபஞ்சத்தின் நிரந்தர தேவை!

-


19 MAY 2021 AT 23:00

கடக்க முடியாத சூழல் ஒன்றை காலம் உருவாக்குவதே இல்லை!

-


Fetching இரவி ராகுல் Quotes