Infinity முடிவிலி   (முடிவிலி --. .- -. .-)
152 Followers · 46 Following

read more
Joined 18 August 2017


read more
Joined 18 August 2017

பிறப்பால் பெருமையொன் றில்லை செயலின்
சிறப்பால் விளையும் சிறப்பு.

-



கற்கை யிதுவே உயர உதவிடும்
கற்கை மறவேலென் றும்.

-



குவட்டுயர மஞ்சுமோ வீழா வருடை
குவட்டிற் கிடைபா யுமே.

-



வருமுன்னர் காத்தலொடு நோயெதிர்ப் பாற்றல்
தருமே தடுப்பூசி யின்று.

-



தற்காப் பறியா மழலை நலன்பேணார்
பெற்றவ ரல்ல பிணி.

-



ஈன்ற மகவினை நோயினின்று காத்தலே
ஈன்றோர் முதன்மைக் கடன்.

-



படித்தும் தடுப்பூசி தீதெனச் சொல்வோர்
படிப்பில் பயனேது மில்.

-



வந்ததும் நொந்து பயனென்ன முன்னமே
முந்தித் தடுத்தல் அறிவு.

-



இட்டோ ரிடையே யிடாதோ ரிருந்திட
நோக்கிப் பரவிடும் நோய்.

-



நோயது தீண்டாது காக்கும் தடுப்பூசி
தீய தொழித்திடும் நன்று.

-


Fetching Infinity முடிவிலி Quotes