Indira Devi   (yuva)
11 Followers · 15 Following

Joined 3 March 2023


Joined 3 March 2023
24 MAY 2024 AT 18:21


பெண்னொன்று
படபடவென
கவர்ந்து சுற்றியது!

இளமை ஒதுங்கியது..
முதுமை, முடக்கியது..
முதியோர் இல்லத்தில்!

பறக்கும் வரை வனம்..
சிறகொடிந்தால்,தளம் !

-


23 MAY 2024 AT 23:08

நிறைய புத்தகங்களை,
மாற்றி, மாற்றி
படிக்கவேண்டும்!
மறக்க வேண்டியவை
பறந்துவிடும்!

-


22 MAY 2024 AT 13:54

மண் வாசனை
மூக்கை துளைத்தது.. .
மண்ணிற்கு நூதன
மணம் எப்படி வந்தது?

அறிந்தோரின் ஆராய்ச்சி ,
மரத்துடன் மோதும்
காற்று தரும் மணமே -
என்பது!

இனி
மர வாசனை என்போம்!

-


22 MAY 2024 AT 10:30

Good for sleeping

-


22 MAY 2024 AT 10:28

enjoy with
peaceful family !

-


22 MAY 2024 AT 10:23



கவிதைகள் எழுதினாலும்..
ஏதோவொரு குறை..
ஏங்க வைக்கிறது !

மறுபடி நாளை..

-


4 MAY 2024 AT 18:14

அமைதியான முறையில்
ஆத்மார்த்தமான பூஜை
நடந்த நேரத்தில், களேபரம்..
நடிகையின் வரவால்!

-


4 MAY 2024 AT 18:08

கவலைகள் தீராத நேரத்தில்,
குழந்தைகளை அழைத்து,
தமிழை கற்றுக் கொடுங்கள்!
மனம் குளிரும்!

-


26 APR 2024 AT 11:57

நட்சத்திரங்கள் அதிகம்
மின்னும்!
உயிர் பிரியும் தருணத்தில்
கண்கள் அதிகம் மின்னும்!

-


18 APR 2024 AT 20:04

சிறகு போலொரு கற்சிற்பம்..
சிற்பியை, சென்று காண,
பறக்க நினைத்தேன்...
இறக்கையில்லையே!

-


Fetching Indira Devi Quotes