Concerning?
It's not that I'm forgetting you;
Only that the number of times I check your 'Last seen' has faded to half.-
Trying to know about me..
கவிதையா, கதையோ, புதினமோ என ஏதேனும் எழுதுவது, கலையா?
அது ஒரு நிலை என்றே நினைக்கிறேன்..
யாசகம் செய்வதுபோல்..-
பால் நிலவே உனக்குள் நான் தேநீரா? குளம்பியா?
முழுமையாக கரைக்கபடுகிறேனா?
இல்லை
என்னில் பகுதி வடிகட்டியில் கரை ஒதுக்கபடுகிறேனா?
-
Now and then, she whispers lessons on loving less—
like the moon to the wave
அவ்வப்போது, குறைவாக நேசிப்பது எப்படி என்று அவள் பாடங்களைக் கூறுகிறாள்— அலைக்கு நிலவைப் போல-
அலையின் வேதனை நிலவு அறியுமா?
அம்மாவாசை அல்லா நாட்களிலும் மேகம் மறையும் நிலவே,
நீ மறைந்தாலும் மறந்தாலும் உன் நினைவின் அலை நில்லாது..-
இசையே
நிலவே
கடலே
மலையே
மழையே
காடே
பறவையே
சூரியனே
வானமே
வானவில்லே
பூவே
வாசமே
வர்ணமே
தென்றலே
நதியே
கடவுளே
கவிதையே
..
இதோ மீண்டும் உங்களை தேடி வருகிறேன்
அவள் விடுமுறைக்காக விலகி சென்றிருக்கிறாள்
இம்முறையேனும் அவள் பிரிவை மறக்க உதவுங்கள்..!
-
வருடம் பல காத்திருந்து
தினமும் அதன் நினைவிலிருந்து
கண்காட்சி நாளில்
அரிதில் கிடைக்காத அந்த புகழ்பெற்ற புத்தகத்தை வாங்கி அடைந்து,
திறக்க நேரமில்லாது
வாரம் சிலமுறையோ
மாதம் பலமுறையோ
கையில் எடுத்து தூசி துடைத்து
மீண்டும் அதே அலமாரியை அலங்கரிக்கும் புத்தகத்தை போல் அல்லாது
அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பும் வேலையிலும்
சட்டைப் பையிலோ
கைப்பையிலோ
அதன் இருப்பை உறுதி செய்து
இருமல், தும்மலில்
அழுகையில்
அழுக்கில்
அழகூட்டுதலில்
வியர்வையில்
குளிரில்
மழையில்
வெயிலில்
உடனிருக்கும் உன் கைக்குட்டையாகவே
இருக்க ஆசை.-
"If you feel hurt by the way they treated you, consider how you treated them. Hurt is mutual."
-
ஒன்றே பிடித்த பாடலின்
பின்னணியில் பிணைந்து,
தாளம் சேர
வரிகள் வரைய
ராகம் முனக
இசைவாயோ..!-