When you hurt the right person,
the wrong one will teach you
how much it truly hurts.
That's the law of life.-
முடிந்து விட்டது
என்று தெரிகிறது.
கைமீ(மா)றி விட்டது
என்றும் தெரிகிறது.
மூளையின் ஓர்
மூலையில் சிறிய
உணர்வு மறக்க
வேண்டாம் என்று
சொல்கிறது. மறந்து
போனவர்களை..!-
People mostly like those who don't ask any questions. Sometimes do they start loving those who come with the expected questions..!
-
அன்னையர் தினம்.
1949 மே 22-ல் பிறந்து
1996 ஏப்ரல் 09 அன்று
தனது '47' வயதிலேயே
காலமாகிப்போன
எனது தாயாரின்
நினைவில் மனது
பாரமாகிப் போகிறது.
அனைவரும் பகிரும்
அன்னையர் தின
வாழ்த்துகளைக்
காணும் போது.-
When life needs a little adjustment,
start with your attitude. But when it demands a transformation, start with your thoughts.-
கடந்துபோன
இத்தனை ஆண்டு
வாழ்க்கையில்
முழுமையாக நாம்,
நம் வாழ்க்கையை
வாழ்ந்திருக்கிறோமா,
என்பதே இப்போதைய
கேள்விக்குறி..!-
அதிகாலை கனவில்
இன்று அவள் வந்தாள்.
மென்மையாய் பேசி
அன்பைப் பொழிந்தாள்.
சமாதான புறாவாய்
எனக்கு கனவுகளே..!-
முதலில் எல்லை மீறி
காதலில் விழுவீர்கள்.
பிறகு பிரிவு நிச்சயம்
என்பதைப் புரிந்து
கொள்வீர்கள்.-
முதல்வரின் வருகைக்காக
மாறி இருக்கும் திருச்சியை
இன்று பார்க்கும் போது
வாரத்திற்கு ஒரு முறை
வந்து போகும் தனது
துணைவனுக்கு எதுவும்
தெரிந்துவிடக் கூடாதென,
தடயமே இல்லாமல்
வீட்டையே தலைகீழாக
மாற்றி வைத்திருந்த அந்த
பெண்மணியின் செயல்
நினைவில் வந்து
போனது..!-
இப்பிறவி எனக்கு
வீணாய்ப் போனதடி.
மறுபிறவியில் நான்
பெண்ணாய் பிறந்து
உனக்கு மட்டுமே
விலைமகளாகிறேன்..
அதற்கு விலையாய்
உன் காதலை மட்டும்
மொத்தமாகக் கொடு
எனக்கு...!-