சொல்ல வேண்டாம்னு
நினைக்கின்றேன்
ஆனா சொல்லியாகனும்
தவிக்கின்றேன்
உன்னை பார்க்காமல் இருக்க
முடியவில்லை என்று முடிக்கிறேன்!-
எழுத்து வடிவமாக்கி
கற்பனைகளை குழுது வர்ணம் பூசி
அழகிய கவிதை... read more
இன்னும் நிறைய உள்ளது
நீ அருகில் வரும்போது
கேட்பதற்கு
சொல்ல சொல்ல திளைக்கிறோம்
நாம் இருவருமே
இவை எல்லாமே உன்னாலே
என்று சொல்லி ரசிக்கிறேன்
இன்னும் ஆயிரம் ரகசியங்களோடு!-
கவிதைகள் நிறைய பிறக்கிறது
அருகில் நீ இல்லை கேட்பதற்கு
இருந்தாலும்,
கொஞ்சம் கூட குறையவில்லை
கொஞ்சி கொஞ்சி பேசுகிறேன்
என் அழகு கண்மணியின்
நினைவுகளோடு!-
சிறு விதையாய் இவ்வுலகில் விழுந்தேன்!
பெற்றோர் சார் அன்பில் விண்நோக்க
வளர துவங்கினேன்!
ஈரப்பதம் மிகப்பிய உன் கூந்தலை
காற்று துவட்ட மழைத் துளியாய்
என்னை தீண்டிய கணம்
சிலுறத் திரும்பினேன்!!
வானவில்லை ரசித்தபடி நின்றுகொண்டிருந்த
உன் அழகில் உரைந்தது என் விழிகள்!
இரவா!! பகலா!! பாராமல் உன் நினைவுகளால்
அச்சிடப் பட துடிக்கத் துவங்கியது என் இதயம்!
மூன்றாயிரம் வகையில் ஆசையை பேச வந்த
என்னை பண்போடு கட்டிய உன் வெட்கத்தால்
உருக செய்தாயடி
கண்ணம்மா!!
புழுக்கம் தாங்காமல் பூக்களால்
பூக்க துவங்கிய என் நேசத்தின் மகர்ந்ததை
நுகர்ந்த படி அள்ளி சூடிகொண்ட உன்னிடம்
என் காதலை காதோரம்
கூறிக்கொண்டே தழுவியபடி!!!
-
திரியாய் எரியும் உயிர்
மெழுகாய் கரையும் உடல்
காற்றாய் அணைக்காமல் நீ!
கானலாய் மறையும் நான்!-
என் பருவத்திரை கிழித்து
உன்னிடம் குழந்தையாக்கு
என் மொழியை இசையாக்கு
என் வார்த்தைகளை கவிதையாக்கு
நட்டு வெச்ச பூங்கொடியே
பூப்பொழியும் இன்பத்தை
என் மனதிற்கு கொடு
நான் வாழும் நாட்களை
சுவையாக்க வந்த செந்தேனே
நிரம்பி தளும்பிய காதலால்
உன்னை அள்ளி கொஞ்ச
என்னிடம் வந்துவிடு
என் வாழ்வின் பரிபூரணமே!-
துன்புற்று கலங்கும் தருவாயில்
சாய்ந்து அழ என் தோள் பயன்படுத்து
என் நெஞ்சில் சாய்ந்து உனக்காக
துடிக்கும் இதயத்தின் சத்தம் கேள்
என்னிடம் மௌன உரையாடி
பேசாத வார்த்தைகளுக்கு பொருள் கூறு
அடிக்கடி என்னிடம் சண்டையிட்டு சேர்ந்து
நம் உறவை வலுவாக்கு
பரிதவித்த என் மேனியை
உன் தீண்டலால் பவித்ரமாக்கு-
நிம்மதியான நித்திரை களைத்து
நித்தம் உன்னை நினைக்க செய்
எனக்கே தெரியாமல் உயிருக்குள் நுழைந்து
என்னை ஆராய்ச்சி செய்
காதல் என்னும் சொல்லின் பொருளை
தேட உதவி செய்
என்னை மறந்து துறந்து இழந்து
உன்னை அடைய வழி செய்
வண்ணத்து பூச்சியாய் வந்து
என் வாழ்வில் பல வண்ணம் பூசு-
உன் இளம் சூட்டு மூச்சுக் காற்றால்
என்னை கதகதப்பாக்கு
மை தீட்டிய கண்களால் என்னை கைதுச் செய்து
உன் மன சிறையில் பூட்டு
அணில் குட்டியாய் என் மீது ஏறி விளையாடி
உன் கூந்தல் நுனியால் கூச்சம் மூட்டு
தினம் ஒரு முறையாவது என் நினைவில் தோன்றி
உன்னை பார்க்க ஆர்வம் கூட்டு
என் கைகளில் உன்னை ஏந்தி
இப்பிறவி பலனை அடைய வழி செய்-
ஆயுதங்களை பதுக்கி
என்னை கொல்ல
ஆயுத்தமாகும் கண்களை மூடி
அருகில் வர தயங்கும்
உன் கூச்சம் பெருகிய
வெட்கத்தால்
பாசி படிந்த என் இதயத்தை
சிவக்க செய்தவளே!
இயற்கை சாயம் தீட்டிய
உன் இதழ்களால்
சிறிது என் கன்னமும்
சிவக்க செய் ராசாத்தி!-