எதற்கும் பயமின்றி இருப்பதல்ல தைரியம்
எதற்கு பயப்பட வேண்டும்
என அறிந்திருப்பது தான்
தைரியம்-
செய்யும் செயலின்
உயர்வை நிர்ணயிப்பது
வகிக்கும் பதவியோ
பெறும் ஊதியமோ அல்ல
சரியான நோக்கத்தோடு,
உண்மையாகவும், நேர்மையாகவும்
செய்யப்படும் அனைத்து
செயலும் உயர்ந்ததே!
அதைச் செய்பவர்
அனைவரும் உயர்ந்தவரே!-
சேவையின் பரிணாம வ(வீ)ளர்(ழ்)ச்சி:
1. சேவை செய்வதே இலட்சியம்.
2. சேவை செய்ய பணம் தேவையில்லை.
3. பணம் இருந்தால் மேலும் சேவை செய்யலாம்.
4. சேவை செய்ய பணம் தேவை.
5. பணம் இல்லாமல் சேவை செய்ய முடியாது.
6. சேவை செய்வதே பணத்திற்காக தான்.-
In life, greatness isn’t measured by size or quantity.
A tiny spark can ignite a vast forest.
Invisible signals command giant machines.
It’s not about how big you are—it’s about how powerful your purpose is.-
பாரினுள் தன்னை
பார்பவன் பாமரன்
தன்னுள்ளே பாரினைப்
பார்பவன் பரமன்
பாமரனை பரமனாக
மாற்றுவதே ஞானம்
அத்தகைய ஞானத்தை நல்குவதே
உண்மையான கல்வி-
நல்லது நடக்குமா?
என்ற சந்தேகம்
ஜாதகம் பார்க்க வைக்கும்.
நடப்பதெல்லாம் நல்லது தான்
என்ற தெளிவு
உண்மையை பார்க்க வைக்கும்.-
In recent days, marriages are celebrated,
It has lot of fun, dance shows, music shows, archestras, varieties of foods, luxury mahals,etc.,
But something, that may be emotion, sentiment, affection, above all true flavor of love were missing.
-
இன்று தோற்றவர்களைக் கண்டு
சிரிப்பவர்கள் எல்லாம்
ஒருநாள் தோல்வியைக்கண்டு அழுதவர்கள்.
இங்கே
மதிக்க வேண்டியது நீங்கள் பெற்ற தோல்வியையே அன்றி
சிரிப்பவர்களை அல்ல
வருங்காலத்தில்
தோல்வியை மதித்தவர்கள் வெற்றியாளர் ஆகிறார்கள்
சிரிப்பவர்களை மதித்தவர்கள்
தோற்றவர்களைக் கண்டு சிரிக்கிறார்கள்
-
Research of creatures is science.
Search for a creator is spiritual.-
எண்ணம் சொல்லாகும் வரை
*மனம் பேசும்*
சொல் செயலாகும் வரை
*வாய் பேசும்*
பின் *செயல் பேசும்*
செயல் பேசத் துவங்கிவிட்டால்
வாய் ஊமையாகும்
மனம் மௌனமாகும்
ஞானம் உதயமாகும்.-