எங்கிருந்தோ வந்து என் கை பிடித்த அவளுக்கு அப்பொழுது தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை சிறைப்பட்டது என் விரல்கள் மட்டும் அல்ல நானும் தான் என்று அவளிடத்தில்....!!!!!
-
ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை எப்பொழுதும் உள்ளதை உள்ளபடியே பிரபலிக்கும் கண்ணாடியை போன்றே இருக்கும் என்று நம்பாதீர்கள் ஏனென்றால் எப்பொழுது வேண்டுமானாலும் அவர்கள் மீது நாம் வைத்த நம்பிக்கையை பல துண்டுகளாக உடைத்து விடுவார்கள் சில காரணங்களுக்காக அவர்களே...!!!!
-
யாருடைய வாழ்க்கையிலும் அவர்களின் ஆணி வேராக இருக்க என்றும் நினைக்காதீர்கள் அந்த வேர்களின் கிளைகளில் சிறிது காலம் வளர்ந்து உதிரும் இலையாகவே இருக்க நினையுங்கள் அதுவே ஆக சிறந்தது ஏனென்றால் உதிரும் இலைக்கு இருக்கும் வலியை விட அதன் வேர்களுக்கு வலி என்றும் குறைவு தான்....!!!!
வலிகள் நம்முடையதாகவே இருக்கட்டும் என்றும்...!!!!!-
பூவை போன்ற மென்மையான அவளை சில முட்கள் காயப்படுத்தி கசக்கி தன் கோவங்களை தீர்த்து கொள்கின்றன ஆனால் அந்த முட்களுக்கு தெரியாது காயப்படுவது அவள் உள்ளம் தானே தவிற அவள் தன்னம்பிக்கை அல்ல என்று எத்தனை முறை அந்த முட்கள் அவளை காயப்படுத்தி கசக்கி எரிந்தாலும் மீண்டும் அதே புன்னகையோடு மலர்வாள் மறுநாள் அதே புன்னகையோடு அவள் தான் என்னவள் வலிகளை கடந்தவள்...!!!!
-
எந்த பாகுபாடுகள் இன்றி எல்லைகள் கடந்து பறக்கும் பறவைகளை போல உன்னோடு இணைந்து பறக்க ஆசை இந்த உலகில் என் வாழ்வின் இறுதி வினாடி வரை இந்த மனித உயிர்களுக்கு இருக்கும் பாகுபாடுகள் மற்றும் எல்லைகளை கடந்து......!!!
-
நான் உன் வாழ்க்கையில் வந்த வழியையும் உனக்கு தந்த வலிகளையும் மறந்து விடு முடிந்தால் என்னையும் கூட....!!!!
-
வலிகள் நிறைந்த உன் வாழ்க்கையில் வழி போக்கனாக வந்த என்னை உன் வலிகளை போக்கிவனாக எண்ணி மகிழ்ந்தாய் ஆனால் நானோ உன் வாழ்க்கையில் மேலும் ஒரு வலியாகவே சேரந்துவிட்டேன் என்பதை உணர்ந்து மீண்டும் வழிப்போக்கனாக செல்கின்றேன் உன்னை விட்டு விட்டு...!!!
-
நீ எனதருகில் இருந்தால் பகலும் இரவாகிவிடுகிறது விழி மூடி திறந்தால் விடியும் இரவு போல ஆனால் நீயோ எனதருகில் இல்லை என்றால் இரவும் பகலாகிவிடுகிறது பல முறை விழி முடி திறந்தாலும் இரவாகதா பகல் போல.....!!!!!
-
நிலவு காண்பதற்கு அருகில் இருக்கும்படி தெரிந்தாலும் நிலவை நெருங்க நினைத்தால் அதன் தூரம் வேறு அதே போல் என்னவளும் அவள் எனது அருகில் இருந்தாலும் அவளை நெருங்க நினைத்தால் தூரம் ஆகி விடுகிறாள் அந்த நிலவு போல....!!!!
-
உன் விழி மோதி என் உயிர் விழுந்தது உன்னிடத்தில் மீண்டும் எழுந்து வர மனமில்லாமல்...!!!!
-