எதிர்பாராத சில திருப்பங்களுக்கு முன்...
இனம் புரியாத ஓர் இருட்டு நம்மை கடப்பது உண்டு..!
கண்ணாடியில் இருக்கும் அழுக்கு
எப்படி நம் முகத்திற்கு சொந்தம் இல்லையோ....
அதைப் போலவே
நம்மை பற்றிய மற்றவரின் எண்ணமும்,சிந்தனையும்
நமக்கு சொந்தம் இல்லை....
வாழ்க்கையின் சுவாரஸ்யமே அது தான்.. !-
அன்பை பகிர்ந்து கொள்ளவும்
புரிந்துக்கொள்ளவும்
அறிவு தேவையில்லை
அழகிய மனம் போதும்-
கோபம் என்பது
முட்டாள்தனத்தில் தொடங்கி
வருத்தப்படுவதில் முடிகிறது.
கோபப்படும் போதெல்லாம்
நம் எதிரி வெற்றி பெறுகிறார்கள்
நாம் தோல்வி கொள்கிறோம்-
தன்னுடைய செயலும்
வார்த்தைகளும் மட்டும் தான்
சரியென்று வாதாடுபவர்கள் மத்தியில்,
அமைதியை மட்டும்
உங்கள் ஆயுதமாக வைத்துக் கொள்ளுங்கள்.!!!-
எதிர்பாராத சில
திருப்பங்களுக்கு முன்
இனம் புரியாத ஓர் இருட்டு
நம்மை கடப்பது உண்டு..!
வாழ்க்கையின் சுவாரஸ்யமே
அது தான்.. !-
மற்றவர்களோடு ஒப்பிட்டும்....
அடுத்தவர்களை எதிர்பார்த்தும்
வாழாதவரை வாழ்க்கை நம் வசம் தான்....-
எல்லா தத்துவங்களும்
இளமையிலே
வாசிக்கக் கிடைக்கிறது....
ஆனால்
அதை பின்பற்ற
முதுமை வரை
போராட வேண்டியிருக்கிறது....-
உலகத்தின் குறைகளை
எல்லாம் கண்டுபிடிக்கும் சிலருக்கு....
தன் குறைகளை மட்டும்
தெரியாமல் போவதற்கு....
பெயர் தான்
சுயநலம்...-
இங்கு எல்லோரும் எதிர்பார்ப்பது
தரமான நியாயத்தை அல்ல....
தனக்கான நியாயத்தை தான்.....
-
இந்த உலகத்தில்
பல பேருடைய வாழ்க்கையையே
திசை மாற்றிய வார்த்தைகள்....
"மற்றவர்கள் என்ன சொல்வாங்களோ "-