நட்பே! நான்உனை என்றுமே
காயப்படுத்த நினைத்ததே இல்லை!
இனியுமே உனை காயப்படுத்த
நினைக்க போவதில்லை!
ஏனென்றால்,
உனை அறுக்கும் பீங்கானாய்
இருப்பதை விட,
நீ வெறுக்கும் பூவாகவே நான்
இருந்துவிட்டு போகிறேன்!
இருந்தாலும் நட்பே,
ஒன்று மட்டும்
ஒருபோதும் மாறாது
என்நட்பு❣️🔥✨-
காலமோ வேகமாய் கரைந்து செல்லுகிறது
நேரமோ உடன் விரைந்து செல்லுகிறது
இரவினிலோ இருளில்லை,
பகலினிலோ ஒளியில்லை
நெருப்பினிலோ அனல்இல்லை,
காற்றினிலோ குளிரில்லை,
கடலினிலோ நீர்த்துளிஇல்லை,
கரையினிலோ மணல்துகளில்லை!
மனதினிலோ மகிழ்வில்லை,
உடலினிலோ உணர்வில்லை
உணர்வினிலோ உயிரில்லை,
உயிரினையே உணரவில்லை
வெறும் மனித சிலையாய்
நித்தம் நகருகிறேன்!
வாழும் நொடிகளில்
தனிமை மட்டுமே
தினம் உணருகிறேன்..!-
பழையன கழியனும், புதியன புகுரனும்,
நன்மையே நடக்கனும், நாடெல்லாம் செழிக்கனும்,
இயற்கையை மதிக்கனும், இன்பமாய் வாழனும்,
ஜாதிமதம் தேவையில்லை இங்குதானே!
நீயும்நானும் என்னைக்குமே நண்பன்தானே!
பொங்கல் தான் பொங்கும் முன்னே நண்பா நண்பி
அதை உழுத நம் மாட்டுக்கு நீ நன்றி சொல்லு!
பொங்கல் தானே உண்ணும் முன்னே நண்பா நண்பி
அதை விளைச்ச உழவனுக்கும் நீ நன்றி சொல்லு!
வந்தது வந்தது தை வந்தது வந்தது
தந்தது தந்தது இன்பம் நமக்கு தந்தது
ஹோய்...!-
வந்தது வந்தது தை வந்தது வந்தது!
தந்தது தந்தது வாழ்வை தந்தது தந்தது!
நெல்லு விதை, மண்பானச்சோறு
கட்டிக்கரும்பு, கதர் வேட்டி சட்டை,
பண்பாடு பாரம்பரியம் எல்லாமே
தமிழர் பண்பாடு பாரம்பரியம் எல்லாமே காக்க
வந்தது வந்தது தை வந்தது வந்தது!
தந்தது தந்தது வாழ்வை மீட்டு தந்தது!-
ஓ! இளைஞர்களே!
யார் உங்களை முற்றுப்புள்ளியாக்க
நினைத்தாலும் கவலைப்படாதே.
அதை காற்புள்ளி ஆக்கி ,
நீ காரியத்தை துவங்கு
அவர்களே தன்னால்
ஆச்சரியக்குறி ஆகிப்போவார்கள்!-
பெரும்புள்ளிகளுக்கெல்லாம்
ஆரம்பம் வெறும்புள்ளி
என்பதை மறந்ததினாலோ,
இங்கு பலபேருக்கு
துவக்கமே பெரும் தயக்கம்..!
-
"அழகே" என்பதை ஓர்ஆயிரம்
விதமாய்
சொல்லி பாருங்கள்...
ஆம், வாய் வலித்து விடும்
ஆனாலும்
இதயம் இனித்து விடும்...
கேட்பவருக்கும்! சொல்பவருக்கும்!
-
எவ்வளவு சிறியதாக இருந்தாலும்
முன்னேற்றம் முன்னேற்றமே!
மாற்றம் பெரியதாய் இருக்கவேண்டிய
அவசியம் ஒன்றில்லை!
இன்று நீ தீக்குச்சியை மட்டும்
பற்ற வைப்பதில் கவனமாயிரு...
நாளை நடக்க வேண்டியதை
ஆண்டவன் பார்த்துக்கொள்வான்...
என்ன நாராயணா, சரிதானே!-
முயலும்வரை இந்தஉலகில்
எதுவுமே முடியாத ஒன்றுதான்...
ஒருமுறை முயற்சித்துப்பார்
யாருக்குத் தெரியும்...
முழுமுயற்சியோடு
இலக்கை நோக்கி ஓடினால்
ஆமையும் ஒருநாள்
முயலை வெல்லலாம்...
ஊர்க்குருவியும் ஒருநாள்
விண்ணுயர பறக்கலாம்...-
என்னதான் இருக்கிறது உன்னுள்ளே
என் உள்ளமெல்லாம் வருடிச்செல்லுகிறாய்...
தெருக்கடையோரம் தென்றல் மெல்ல தீண்டிட
என் உடம்பெல்லாம் ஒரே சிலிர்ப்பு
அந்த அதிகாலை வேளை சில்லென்ற காற்று🍂
நாயரிடம் பத்து ரூபாய் கொடுத்துவாங்கி
உள்ளங்கைகளில் வைத்தால் அத்தனை இதமை...
என்னதான் இருக்கிறது உன்னுள்ளே
குடிக்கையிலே என்னையே வருடிச்செல்லுகிறாய்
அதிகாலை நாயர்கடை டீயே☕...-