என் கனவுகளின்
மொழிக்கலப்பு நீ!-
காயத்ரி தமிழன்
.
எழுத்தாணி முனையில்
எழுந்த என்
எண்ணங்களை பதித்த பதிவுகள்...
👇... read more
இலையோடு இலையும்
கிளையோடு கிளையும்
மரத்தோடு மரமுமாக
மோதிக் கொள்ள
கிளர்ந்தெழுந்தோடிய தென்றலில்
மொய்த்துக் கிடந்தது
அண்டவெளியில் அவசரமாய்
நாம் தொலைத்துவிட்ட
அத்தனை அன்பும்...
பிரவாகமாக...-
சாதிச் சுடுகாடு
தள்ளிவச்ச சாதிசனம்
சாதிக்கே சுடுகாடு
தந்துவைப்பது எக்காலம்
-வைரமுத்து-
கற்பிக்கப்பட்ட இலக்கணங்களை
கலைத்தெறிந்தாலும்;
அற்புதங்களுக்காய்
அவள் பேராசைக் கொண்டாலும்;
படித் தாண்டி பார் கண்டு
பரந்து நின்றாலும்;
பிடித்ததற்காக
பிடிவாதம் கொண்டாலும்;
அதிர பேசி சிரித்தாலும்;
அவள் விருப்புக்கேற்ப நடந்தாலும்;
உங்கள் "பூ", "நிலவு" என்ற
உவமைகளுக்கெல்லாம்
எதிர்மறை என
எழுந்தாலும்;
அவள் பெண் தான்!
அவள் பெண் தான்!-
பிடித்ததை மட்டுமே
செய்ய சொல்லுது மனசு...
எப்போதும் உனக்கு
பிடித்ததை மட்டுமே தான்
செய்ய சொல்லுது என் மனசு!-
மனம் இருப்புக் கொள்ளவில்லை
கண் உறக்கம் தொலைத்து
கனவுகளால் கனத்தது...
எதையேனும் எழுதிவிட்டாலொழிய
எனக்கு நிம்மதியில்லை.
ஆறுதலுக்காய் பேனா பிடித்தேன்!
அவனி பூராவும் சுற்றி வந்தும்
அங்கலாயித்தது என் எண்ணம்...
ஆனால் வார்த்தை ஒன்றுமில்லை.
வெற்று பக்கத்தையே
வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
'வீடுவரை வந்த கவிதைக்கு
விசாரித்து விட்டு போக என்னவாம்?'
பொறுமிக் கொண்டிருந்தேன்!
அப்போது...
கிழக்கு வானத்தை
கிழித்து கொண்டு வந்த
ஒளிக்கீற்று ஒன்று
சாளரம் வழியே உட்புகுந்து
குசலம் விசாரித்தது...-
ஊரிலுள்ள
பெண்களுக்கெல்லாம்
பூ வைத்து
பார்க்க விரும்பும்
ரசனைக்காரன்,
பூ வியாபாரி...-
உன் கன்னத்தில்
குழி வெட்டி
என் எண்ணத்தில்
உனை விதைத்தது யாரோ!?-
அவளுக்கு கொஞ்சம்
அலட்சியம் அதிகம் தான்.
அசடு வழிய நான்
ஆசையோடு அவளை
அழைக்கும் போதெல்லாம்
அசட்டை செய்வதே
அவள் வழக்காகிவிட்டது.
#கவிதையவள்-