இருள்
இந்த உலகின்
எல்லாவற்றையும் மூடி
மறைக்கின்றது.
பகல் அப்படியல்ல
பளீரென்று சட்டைகளை
அகற்றி நிர்வாணபடுத்துகிறது.
சுயம் காண
பகல் போல் பயணப்படு.
-
காதல் பினி இல்லாமலே
28 ஆண்டுகளை உருட்டியவன்.
பல காடு,மலைகளை கடந்து
பாலைவ... read more
மணம்
வாசனை திரவியம்
தெளிக்கப்பட்ட
பெட்டிக்குள் இருப்பது
விஷம் அருந்திய அக்கா-
எஞ்சிய உணவு
குளத்து மீன்களின்
வயிறுநிறைந்தது
ஹோட்டல் முதலாளியின்
வயிற்றெறிச்சலில்…-
நதிக்கரையில் நாகரீகம்
தோன்றியது என்றார்கள்.
இன்று அந்த நதியே
எங்களை அதுவாகவே
புதைத்து விட்டது
பிறந்தோம்
வளர்ந்தோம்
பின்பு மண்ணோடு
மறைந்தே போயிட்டோம்.
எஞ்சிய சனமும்
யாரோடு இனி வாழ
போகிறோம் என்று ஏங்கி
நிற்கதியாய் அந்த நதியோரத்தில்
புழம்பி நிற்கிறது.-
நினைவில் காடுள்ள
மிருகத்தை எளிதில்
கட்டுப்படுத்த முடியாது.
நான் நினைவில்
காடுள்ள மிருகம்.
-மலையாள கவிஞர்
சச்சிதானந்தம்-
எதிர்காற்று உந்தி தள்ள
முன்னேறி செல்லும்
சைக்கிள்களே நம்
வாழ்க்கை குறித்தான
பயத்தினை தவிடு பொடியாக்குது.
@ நா.முத்துக்குமார்-
உணவின் ருசி
அதில் போடப்படும்
பெருட்களாலானதா?
அது வெறும் உணவு மட்டுமா?
அது அன்பில்லையா ?
அக்கறையில்லையா ?
பிடித்தவர்களுக்கு செய்கிறோம்
என்ற மனத்தோய்வில்லையா.
🖋️கே.வி.ஷைலஜா-
எல்லோரும் ஓடி
கடக்க நினைக்கும்
தூரத்தை நான்
நடந்து கடக்க
விரும்புகிறேன்.
📝கே.வி.ஷைலஜா-
வாழ்வின் நிறைவும்
நோக்கமும் அந்த
நொடியின் மகிழ்ச்சி
தானே
-இமைக்கும் கருவிழிக்குமிடையே
கட்டூரை தொகுப்பில்
🖌️கே.வி.ஷைலஜா-
பெண் சமூகத்தின்
தொப்புள்கொடி
எத்தனை பிறவியலும்
அவள் போல் ஒர் தாய்மை
வாழ்வு யாருக்கு உண்டு.
வாழ்வாங்கு வாழ வழி
தந்தவளும் அவள் தானே.
பல பாரங்கள் சுமக்க
கற்று தந்தவளும் அவள் தானே.
அகிலம் முழுவதுமாய் இயங்க
அச்சாரமும் அவள் தானே.
வாழ்க!! வாழ்கவே !!!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 💐💐-