பல முகங்கள் பல குரல்கள்
அறியாத யார் யாரோ,
தெரியாத நபர்கள்.
ஒரு சிறு கூண்டில்
அண்டிவிட்ட பறவைகள் போல்
ஓரிரவு பயணம்.
உம் என்று சில பேர்
பார்த்ததும் புன்னகையாய்
சிலபேர்
அழுகுரல் சிரிப்பொலியுமாய்
குழந்தைகள் சிலபேர்
பிஸ்கட் பகிர்தலும் , உணவு பகிர்தலும்
சாதாரணமாய் நடந்துவிடும்,
அன்பாய் சிலபேர்.
இரவு பயணத்தில்
ஜன்னலோர சீட்டுக்கு
எந்தவித கிரக்கியும் இல்லை.
ஏசி பெட்டி என்றால்
போர்வை போர்த்தி
தூங்கிவிடுவது இனிமையே.
பயணம் முடிந்துவிடும்.
சிறு கூடாய் இருந்த இடம்
திரும்பி பார்க்க படாமல்
கடந்துவிடப்படும்
அவ்வளவு பேராலும்!
இது புரிந்தால் போதும்
பேருண்மைகள் விளங்கும்!
-gaanarupini
-
பறவைக்கும் துறவிக்கும்
இடையிலான வாழ்வு
அவளுடையது.
பரந்த வானமெங்கும் பறக்க நினைப்பவள்
உலகெங்கும் சுற்றி திரிய
பேராவல் அவளுக்கு.
சில நேரங்களில்
மலை குகையின் உள்ளே
எவரும் அறியாதொரு
தவநிலையும் வேண்டுபவள்.
ஞானம் தேடுபவள்.
பறந்த வானத்தில் ஞானமும்
இருண்ட குகையில் பரந்த அண்டத்தையும்
உள்நோக்க கற்றவள்.
ஞானச்செருக்கல்லாமல்
உலகப்பார்வை இனிக்காது
அவளுக்கு.
எல்லாம் இனிமை அவளுக்கு
எல்லாம் காதல் அவளுக்கு
எல்லாம் ஞானம் அவளுக்கு
இந்த நோடியின் அன்பை
புசித்தவள்.
அவள் என்றும் தொடர்கதை தான்
கே.பி யின் கதை அல்ல
இவள் கதை பரந்து விரிந்தது
பேரானந்தத்தின் கருவில் உளது!
-
It's pathetic to see the world saying YES of a person being depressed but 'not ok' with a person with free thinking
-
We are all on a pilgrimage.
With highs and lows,
Happiness and sorrows,
On the way we follow -
The rules and directions.
Only on the reach,
would we come to know
The farthest distances travelled.
The newest adventures unraveled
To find that thing!
That cannot be said
But only be understood
Without a word or a doubt,
In the final destination,
To which,
We were all on the pilgrimage!
-
No more racing heart
No more sleepless nights
I didnt know that
it could change
in the blink of an eye.
Days feel calm and
Nights turned peaceful.
Is this the normal life?
Asks my wondering mind.
I could see more clearly
I could think in clarity
As if a veil had lifted intently
And The wait was over finally
From darkness to light
I come out merrily.
What makes all this happen?
That was not in my hands
To make it as i wish to beckon.
Life is only a wonder
Beyond our understanding
We can only ponder
With the beauty of its never ending....
-
Lust
That adoring crystals on the jewellery,
And the colour and shine it renders
beckoning to be worn on the wrist and neck
Those fragrances that uplifts the mood
The dim lights that soothens the eyes
That subtle mono sound of the piano
That ears would send to the brain
To crave forever
That soft silky cozy warm blanket
on a winter afternoon
my skin would pleasure with
That slow cooked love filled food
with relentless taste
which my appetite awaits
The choice of taking rest on a
busy weekday with no regrets
And more subtle things on earth
Makes the lustful desires for life.
Life is beautiful when it's lustful.
-
காதல்
முழுமையாய் வாழும் இடம்
பிரிவு.
திருமணம்
நம்மை நாமே திருத்தி எழுதும்
மற்றொரு தேர்வு.
இரண்டும் சேர்ந்துவிட்டால்,
ஒன்று- பெரும் வெற்றி
இல்லையேல் படுதோல்வி.
சேராவிட்டல்,
மனதின் இறப்பு
ஞானப்பாதையின் வழி திறப்பு .-
அவன், அவள் ரசித்த
சில இசையில் இருந்தான்
சில கவிதை வரிகளில் வாழ்ந்தான்.
காற்று சில சமயத்தில்
அந்த இசையை சுமந்து வந்த போதெல்லாம்
அவள் அவனை உணர்ந்து கொண்டே இருந்தாள்.
பூமியில் எங்கோ ஒரு
மூலையில் இவளும்
வேறொரு திசையில் அவனும்
நினைவுகளின் அலைவரிசையில்
அவ்வப்போது இணைந்து கொண்டே,
கடந்த காலங்களின் ஞாபகங்களின் இனிமையில்
வாழ்ந்து கொண்டே...
கரைந்து போயினர்.
காதலும் கரைந்து போகும்!
-
பச்சை வண்ண கதிர்களை
பஞ்சமின்றி வழங்குகிறாய்
கொள்வாரில்லை.
கொண்டவர்க்கோ பேரானந்தம்
தருகிறாய்.
இளைப்பாறுதல் ஈட்டுகிறாய்.
வசந்தகாலமாய் ஓவ்வொரு
வருடமும் வந்து செல்கிறாய்
உன்னை காணவே நானும்
பலதிங்கள் காத்திருப்பேன்
நீ வரும் அந்த ஓர் திங்களுக்காய்.
பச்சை வண்ணமே!
என் உச்சி முதல் பாதம் வரை
குணமாக்கும் வித்தை எங்கு பெற்றாய்?
பார்த்துக்கொண்டே கடந்து
செல்கின்றேன்.
உன் அடுத்த திங்களின்
உருமாற்றத்தை
கண்டுகொண்டே நிதமும்.
சிறுபிள்ளை போலவே!-
சில நேரங்களில்
உணர்வுகளின் எல்லைகளில்
இசைக்கும் இடம் இல்லை
வாய் திறந்த வார்த்தைக்கும்
வேலை இல்லை
உடல் அசைவுகளும் நகர மறுக்கும்.
கண்ணீரின் துணையிலே
உணர்வுகள் எல்லாம்
உடல்விட்டு காயமாற்றும்.
கண்ணீர் மட்டுமே
இதயபுண் ஆற்றும்.
உறவுகளோ, நட்போ,
உற்ற துணையோ
அர்த்தமற்று நிற்கும்.
'நான்' என்பதே
தனிமையில்நின்று
தன்னை உணரும்.
தனித்து இருப்பது மட்டுமே
உயிரின் சாட்சியாய்
காயங்களின் இளைப்பாறுதலாய்
காலங்கள் கடந்து
கடைத்தெறும்.-