மனம் தத்தளிக்கிறது
அந்த நேரத்திற்குள்
என்னைத் தேடும்
விழிகளைக் காண-
Fire🔥 Star💫
(Brev 💫)
36 Followers · 67 Following
I m Fire 🔥 & I m a Star 💫
Joined 11 July 2017
28 MAY 2021 AT 6:41
காற்று வீசிக் கலையும்
மேகம் போல எங்கோ
ஓர் இடம் தங்கிவிட்ட
காதலுக்கென்று
ஒரு கவிதை சொல்ல
காத்திருந்த தருணங்களெல்லாம்
காலத்தால் அழித்து விட
வான்குருவி தேடி வருகிறது
பிரிந்த அந்த மேகங்களை-
28 MAY 2021 AT 6:36
நானாக இருந்தாலும்
எல்லா செயல்களையும்
கட்டுப்படுத்திவிடுகிறது
உன் ஞாபகம்
-
28 MAY 2021 AT 6:28
என் எண்ணங்களுக்கு
தீனி போட முடியாமல்
இன்னும் அதிகமாக
வளர்த்துக் கொள்கிறேன்
என் ஆசையை-
18 APR 2021 AT 18:52
என் தலை கோதும்
விரல் தேடி ஏங்கும் இரவெல்லாம்
தவறாமல் கன்னம் நனைக்கும்
கண்ணீர்த்துளி சொல்கிறது
தலை கோதிய விரல் மட்டுமல்ல
என் பசியாற்றிய கரத்தையும்
கனல் கொண்டு போன கதையை-
10 APR 2021 AT 14:02
எதன் மேலும் ஈடுபாடு இல்லாமல்
இருந்திடவே ஆவல் கொள்கிறேன்
ஒவ்வொரு முயற்சியும்
பித்தாய் தான் முடிகிறது
இறுதியில்-
3 APR 2021 AT 10:11
என்னை நானும்
தொலைத்துவிட்டேன்
ஆண்டுகள் பல கடந்து
உன்னை கண்ட அந்த நாளில் தான்
என்னை நானும் மீட்டெடுத்தேன்-