எஸ். ஜோவிதா(எஸ். ஜோ)   (எஸ்.ஜோவிதா(எஸ். ஜோ))
2 Followers · 2 Following

Joined 28 May 2021


Joined 28 May 2021

வானவில்லாய் விழிகளில் விழுந்தது உன் விம்பம்
வியந்து நான் ஒதுங்க ஒற்றை முடி தீண்டியே
சீண்டுகிறது சில்லிடும் தென்றல் சிற்பியின் தூரிகைக்கு சவால் விடும் சிலையினை பார்த்த பின்பும்
உன் நிலை தான் என்ன என ?
சிறு புன்னகை பூக்க, சலனமற்ற மனதுக்கு விருது வாங்குபவன் தான் நான்!
ஆயினும் அரைக்கண்ணால் அளவெடுத்தே அசந்து போகவே செய்கிறேன்
அசர வைக்கும் அப்சரஸ் வம்சமோ என!
(எஸ். ஜோ வின் காற்று வரும் ஜன்னலில் ஓர் காதல்! நாவலிலிருந்து)

-



#பயன்படுத்தாத எந்த திறமையும்
அதன் ஆற்றலை இழந்துகொண்டே வரும் !
வாய்ப்பு கிடைக்கும்போது திறமையை பயன்படுத்துபவர்களும்,
வாய்ப்பு கிடைக்காத போது கிடைத்ததை வைத்து புத்திசாலித்தனத்தை பயன்படுத்துபவர்களுமே சாதனை பட்டியலில் இடம் பெறுவர்.
#எஸ்.ஜோ ‘ டீம் பாலிசி

-



இதமாக ஒலிக்கவே செய்கிறது
இமைகள் இணைத்து எனை நீ விளிக்கும் போது !
இம்சை செய்தோ கொல்கிறது இதழோரம் வீற்றிருக்கும் மச்சம் !
இரு அதரங்கள் குவித்து, நீ பாடும் அழகு பார்த்து,
அடிமை சாசனம் எழுதுகிறது பித்துப் பிடித்த என் மனம் !
நீ மீட்டுகின்ற வீணையில் மாட்டிக்கொள்ளவே ஏங்குகிறது தினம் !
(எஸ். ஜோ வின் “என் பிரபஞ்சத்தினை நிறைத்துக் கொள்ளும் காதல் நீ !”
நாவலிலிருந்து)

-



ஏக்கங்களை வைத்துக்கொண்டு நீ நிற்க !
ஏதோ ஓர் ஒப்பந்தத்தில்,
என்றோ ஒரு நாள் இட்ட கையொப்பம்
எனைப் பார்த்து நகைக்க !
நழுவிவிடுமோ என் காதல் என
நான் தவிக்க !
தவிப்பதையும், துடிப்பதையும்,
வேடிக்கை பார்க்கும் ராட்ஷசி நீ !
என சபிக்க நினைக்கும் மனதோ,
ரோஷம் கெட்டு, வேஷம் கட்டுகிறது,
கடல் தாண்டி நீ விலகினாலும்,
கடுகளவும் பாதிப்பில்லை எனக்கென!
(எஸ். ஜோ வின் ‘உன் கைதி நானாகிறேன்!´ நாவலிலிருந்து)

-



என்னை நீ ஏய்த்தாலும், எந்த எதிர்ப்புமின்றி
உன்னை ரசிக்கவே தூண்டுகிறது என் மனம்!
எதிர் எதிர் துருவங்களாக நாம் இருந்தபோதிலும், எதிர்பார்ப்பு எதுவுமின்றி, எல்லையை தணடவே செய்கிறது, நாம் எழுதிய ஒப்பந்தத்தில் ஓர் முற்றும் போட்ட காதல் !
முற்றும் போட்டதென்னவோ நாம் !
முற்றிலும் உன்னிடம் வீழ்ந்து போனதென்னவோ நான் !
எனை சுற்றி பின்னுவதென்னவோ நீ !
ஒற்றை வரியில் நீ சம்மதம் தர, ஓர் தவம் தான் நான் இருக்க, ஓசையின்றி அலறுகிறது என் நெஞ்சம், ஓர் அரக்கியிடமா அடகு வைத்தாய் உன் மனதை என ?
மீளவும் முடியாது, மாளவும் முடியாது,
மவுனம் காக்கிறது மானம் கெட்ட இந்த மனம் !
(எஸ். ஜோ வின் ‘உன் கைதி நானாகிறேன்!´ நாவலிலிருந்து)

-



பூமியின் எல்லையில் நின்று கொண்டு
நிதானித்தாலும் நிலைகொள்ளாது
நில நடுக்கம் உருவாக்குகிறது
நினைவில் நிரந்தரமாக தரையப்பட்ட நின் முகம் !
தரையில் மண்டியிட்டு நான் கதறினாலும்,
உதறிவிட்டுப் போன உன் உருவம் தான்
என்னைப் பார்த்து ஏளனத்தை
ஏவியே விடுகிறது !
ஏவிய ஏளனமோ என் நிலை கண்டு
எகத்தாளமாக கேட்கிறது
ஏன் உனக்கு வேறு ராட்ஷசிகளே
வாய்க்கவில்லையா ? என !
ராட்ஷசிகள் கோடிகள் இருந்தாலும்,
என் காதல் கொடி சாய்ந்து போனது
உன்னிடம் தான் என நான் சொன்னால்
நீ இசைந்து விடுவாயா என்ன ?
(எஸ். ஜோ வின் ‘உன் கைதி நானாகிறேன்!´ நாவலிலிருந்து)

-



நின்று கொண்டு நிதானித்தாலும்,
நிலைகொள்ளாது நில நடுக்கம் உருவாக்குகிறது நினைவில் நிரந்தரமாக தரையப்பட்ட நின் முகம் !
தரையில் மண்டியிட்டு நான் கதறினாலும்,
உதறிவிட்டுப் போன உன் உருவம் தான்
என்னைப் பார்த்து ஏளனத்தை ஏவியே விடுகிறது !
ஏவிய ஏளனமோ என் நிலை கண்டு
எகத்தாளமாக கேட்கிறது ஏன் உனக்கு வேறு ராட்ஷசிகளே வாய்க்கவில்லையா ? என !
ராட்ஷசிகள் கோடிகள் இருந்தாலும்,
என் காதல் கொடி சாய்ந்து போனது உன்னிடம் தான் என நான் சொன்னால் நீ இசைந்து விடுவாயா என்ன ?
(எஸ். ஜோ வின் ‘உன் கைதி நானாகிறேன்!´ நாவலிலிருந்து)

-



ஓர் மார்க்கமும் இல்லை !
வெறுக்காமல் விலக்க,
வழிகளும் இல்லை !
விழி கலங்கி விடை தர,
வார்த்தைகளும் இல்லை !
வஞ்சிக்கும் மனதும்,
கெஞ்சிக் கேட்கிறது,
ஊசலாடும் என் காதலுக்கு
ஓர் உயிர் வழங்கி
விட்டுத்தான் போயேன்,
எஞ்சியிருக்கும் ஏக்கங்கள்
ஏலத்தில் உழலட்டும்!
(எஸ். ஜோ வின் ‘உன் கைதி நானாகிறேன்!´ நாவலிலிருந்து)

-



இணைபிரியா இறுமாப்பில்,
இரு முகம் காட்டுகிறது வெண்ணிலவு!
இருண்ட வானமோ இழுத்தணைக்க,
மருண்ட நிலவோ பின் மயங்கி முகம் மூட,
பார்த்த எனக்கோ பாவை உன் நினைவே கனக்க,
பிச்சை கேட்கும் நிலையில் நான் இருக்க,
துச்சமென தூக்கி போட்டு,
தூசி தட்டிவிட்டு போகிறாய் நீ!
துடி துடித்து அடங்குகிறது
உன்னிடம் அடிமையான என் காதல் !
அடிமையாவதும் , அடிபணிவதும் ,
ஆள்வதும், ஆட்கொள்வதும்,
அகிலம் வென்ற இந்தக் காதல் தான் என
நீ அறிந்து கொள்வது என்றோ ?
(எஸ். ஜோ வின் “என் பிரபஞ்சத்தினை நிறைத்துக் கொள்ளும் காதல் நீ !” )
நாவலிலிருந்து)

-



நினைத்தே தெரிந்து தொலைக்கிறேன் உன்னை!
தொலைவதென்னவோ நான் தான்!
தொலையாது எனை துவைப்பதென்னவோ
உன் காதல் தான்!
தொலை தூரம் தொலைந்தே போனாலும்,
தொல்லையில் விருது வாங்குகிறது
உன் நினைவுகள் !
நினைவலைகளில் மட்டும்
உன்னை நிலை நிறுத்திய நானோ
விலைமதிப்பற்ற வலையில்
விழுந்தே தொலைவேன் என எண்ணியதில்லை!
கலைகள் பல இருந்த போதிலும்
நின் காதலினை கற்று, முற்றும் துறந்து, மறந்தே
தொலைக்கிறேன் !
(எஸ். ஜோ வின் காற்று வரும் ஜன்னலில் ஓர் காதல்! நாவலிலிருந்து)

-


Fetching எஸ். ஜோவிதா(எஸ். ஜோ) Quotes