ER.RANJITHA DHARA   (VIBE OF DHARA..)
30 Followers · 55 Following

read more
Joined 21 September 2022


read more
Joined 21 September 2022
14 FEB AT 15:16

இன்பமும்
துன்பமும்
எல்லாம்
மறந்து
மன்னிப்பதும்
மறப்பதும்
தான்
நம் இருவருக்குள்
இருக்கும்
ஒப்பந்தம்
புரிதலின்
ஈடுப்பாடே
நம் முடிவில்லாத காதல்...!

-


14 FEB AT 15:01

உன்மீது சுமப்பதற்குள்
முன்னமே
என்னிருதயத்தை தொட்டு
ஜெயித்தவன் நீ..

அடம்பிடித்து
நான் தான்
ஜெயித்தேனென்று
கூறினாலும்
என்னிருதயமோ கூறியது
தோற்று போனது
என் திமிறெடுத்த
காதல் தானேன்று...!

-


14 FEB AT 14:52

பித்தமுமில்லை..
சித்தமுமில்லை...
அன்பை
மௌனமாய்
வெளிப்படுத்தும்
காதலின்
மொழி..

-


28 JAN AT 1:20


நீ..
நான்...
நாமாகும் இடைவெளியில்
மலர்ந்தது
உன் மீதுள்ள என்
காதல்!

உன் மூச்சுக்காற்றை சேமித்து வை...
என்றாவது ஒரு நாள் என்
நுரையீரலை அடையட்டும்
அவை ஓய்வெடுக்கும் முன்!

உன் விரல் போதுமடா. .
உலகின் அத்தனை
காதலையும், அன்பையும்
அனுபவித்தவரின் பட்டியலில்
நான் முதலிடம் பிடிக்க!

இந்த நொடி உன்
சிந்தையில் நான் வாழ்கிறேன்...
மறுக்க முடியுமா???

-


14 DEC 2023 AT 15:52

நீயில்லாத ஒவ்வொரு
பொழுதும்,
உன் அழைப்பிற்காக
காத்திருக்கும்
ஒவ்வொரு நொடி நேரமும்,
உன்னை காண அடம்பிடிக்கும்
இருதயத்தை சமாளிக்க
வழியறியாமல்,
உன்னோடு இருந்த
இனிமையான
நினைவுகளை
நெஞ்சில் சுமந்து
நாட்களை
கடக்கிறேன்
அனுதினமும்...!

-


7 DEC 2023 AT 4:22

உன் விழிதீண்டலாய்
நேசித்த
நாட்களின்
நினைவுகளெல்லாம்
என்னிருதயத்தை
இதமாய்
தொட்டு செல்கிறது..!

-


3 DEC 2023 AT 23:11

முற்று பெறாத
ஓவியமாய்..
காதலும் இடமும்
அறியாத
அவளின் காதலோ,
தாமதமாகவே
பூமியெங்கும்
தன் இருதயமானவனை
தேடி
உயிரோவியமாய்
அவனிடம்
தஞ்சமடைத்தது...!

-


24 NOV 2023 AT 18:45

அன்பாய் அரவணைத்து
கூறும் காதலை விட,
தொலைந்தூரத்தில் இருந்து
இயல்பாய்
போதும் போதுமென்ற
கூறுமளவிற்கு
காட்டும்
உன் அன்பும்
காதலும்
முழுமையாய்
நிரம்பிருக்கிறது.
என்னிருதயத்தில்...!

-


22 NOV 2023 AT 17:31

நம் மனஆறுதலைக் கூட
அருகில் இருப்பவர்களிடம்
கொட்டி தீர்த்துக் கொள்ளலாம்..

ஆனால்,

மனவலிமையை மட்டும்
நம்மை அதிகமாக
நேசிப்பவர்களிடம் மட்டுமே கொடுத்திட முடியும்..


-


31 OCT 2023 AT 23:20

உன்மீதுள்ள அன்புக்காதலால் எதிர்பார்ப்புகள்
ஏதும் இல்லாமல்,
எதிர்பாராத
வாழ்க்கையாய்..
என் வாழ்க்கையின்
முழுப்பாதையில்
பிடித்த கரங்களை விடாமல்
மிக நீண்ட காலத்தின்
அர்த்தமாய் வாழ..
என் கணவனாக
தவமில்லாத
வரமாய் வந்தவன் நீயே..

-


Fetching ER.RANJITHA DHARA Quotes