Life steps in
Where parents, teachers, friends, fail
The lesson is taught anyway
However unwilling the pupil!-
முதல் காதல் தோல்வி
மூன்றரை வயதில் - பள்ளி தோழி
ஓயாது விளையாட்டு அவளுடன்
வீட்டில் தினமும் சொல்லி மகிழ்ந்தான்
அவள் இவன் இணையென்று
ஆசிரியை தெரிவிக்கிறாள்
அவள் இவனை துறந்து பல நாட்கள் ஆனதென்று ...
இவன் எனோ இன்னும் அவள் தன் தோழி என்ற நினைப்பில்
அவளுக்கான ஒரு அழகிய பரிசை ஏந்தி செல்கிறான்
-
Timelessness (haiku)
Sometimes in stillness
River reveals, revels in
Lines centuries old
-
மருத்துவச்சி
மருத்துவம் பார்ப்பேன் என்பாள்
ஊசி போடுவதாகச் சொல்லி
பிஞ்சு விறல் கொண்டு நீரை தெளிப்பாள்
இதயத் துடிப்பை வியந்து கேட்பாள்
பின் கண் காது கால் பரிசோதனை -
இனிமேல் எல்லாம் சரியாகிவிடும் என்பாள்
சிரிப்பை மருந்தாகும் என் மருத்துவச்சி-
பண்பாட்டு அதிர்ச்சி
கல்லை கண்டால் நாயை காணோம்;
எடுப்பார் கை பிள்ளை -
என்கிறது ஒரு சமூகம்.
பிள்ளைகளை தவிர்த்து
நாய்களை கொஞ்சுகிறது
இன்னொரு சமூகம்.
-
தியாகம்
தான் இறந்து
உடலை பிள்ளைக்கு உணவாக்கும்
சிலந்தி தந்தை-
நான் ஒன்றும் அகராதி இல்லை
நீ எப்பொழுதாவது புரட்டி பார்ப்பதற்கு
நான் ஒன்றும் கடற்கரை இல்லை
நீ அல்லாடும் தருணத்தில் அணைப்பதற்கு
நான் ஒன்றும் விரல் நகமில்லை
நீ சிந்திக்கும் நேரத்தில் களைவதற்கு
நான் புறக்கணிப்பால் உடையும் நீர் குமிழி-
இன்பமளிப்பது வேறு எதுவுமில்லை
தவறில் தோய்ந்து தவழும்
வார்த்தை, சொல்லாடல் சொல்நடை,
தானாக பீறிட்டு எழும் ஓசை ஓடை
வீண் பிதற்றலில் பிறக்கும்
இசையை மிஞ்சும் இன்பம்
உயிர்த்தெழும் நம்பிக்கை
உடல்முழுதும் ததும்பும் உற்சாகம்
உன்மத்தம் அளிக்கும் நீர்வீழ்ச்சி
-
The crystal ball
Reveals a desolate Winter
Grey, gloomy clouds
Watch over blackened withering branches
If things don’t get it right in Spring
Life plunges headlong into despair
-
The crystal ball
Reveals a desolate Winter
Grey, gloomy clouds
Watch over blackened withering branches
If things don’t get it right in Spring
Life plunges headlong into despair
-