கல்லெறிந்து கண்ணாடியை உடைத்துவிட்டு,
கண்ணாடி தான் கல்லை உடைத்துவிட்டது - என்ற
சொல்லிற்கு பிறகு,
சிறு புன்னகையுடன் விலகிக்கொள்கிறேன்.
வீண் விவாதம் செய்ய விரும்பவில்லை.-
உரிமை
உரிமை உள்ளது என நினைத்து பேச,
அவர்களை பற்றி பேச
உனக்கு உரிமை இல்லை,
நீ உன் வேலையை மட்டும் பார்.
என்ற வார்த்தைக்கு பிறகு,
உள் மனது உடைந்துவிட்டது.
மீண்டும் அவர்களை பற்றி பேச ஒருபோதும் மனம் ஒப்புக்கொள்ளாது.-
கடன்
அனு அனுவாய் சாவதற்கு
கடன் வாங்குதல் சரியான வழி.
இப்படிக்கு,
கடன்காரன்.-
தெரு நாய்களாக பிறந்துவிட்டோம்..!!!
தெரு நாய்களாக பிறந்துவிட்டோம்.!
அலைந்து திரியத்தான் வேண்டும்.
அன்றாட வாழ்வியலை அரைக்குறையாய் வாழ கூட,
அலைந்து திரியத்தான் வேண்டும்.
வீட்டு ( பணக்கார ) நாய்களாக பிறந்தால்,
வசதிக்கேற்ப்ப வாழ்ந்துக்கொள்ளலாம்.
வேண்டுமென்றால் வானின் எல்லைவரை
வானுர்தியில் கூட சென்றுவரலாம் - ஆனால்
நாம் தெருநாய்களாக தானே பிறந்துவிட்டோம்.
அன்றாட வாழ்வியலை அரைக்குறையாய் வாழ கூட,
அலைந்து திரியத்தான் வேண்டும்.
மறக்காதிர்கள்!!!!
நாயாக பிறந்தாலும்,
பணக்கார நாயாக பிறக்கவேண்டும்.-
வெள்ளி நிலவை
கருவாய் சுமந்து - அவள்
விடியலை எதிர்ப்பார்த்து
கொண்டிருக்கிறாள்.-
நானே உன் மகனாய்
நான் தொலைத்த எனதுயிர்
மறுபிறப்பாய்,
மீண்டும் என் கருவாய்,
தொட்டு தூக்கி கட்டியணைத்த
முதல் தருணம்,
கலங்கிய என் கண்ணீர் துடைக்க,
துடிக்கும் என் மகன் இதயம் சொன்னது
நானே உன் மகனாய்...-
என்னவளின் எழிலழகில்
வண்ண மயிலிறகும் மயங்கி
தலைகீழாக விழுந்து கிடக்கிறது
அவள் செவி மடலில்.-
அவளருகே அமர்ந்து
வேடிக்கை பார்க்கிறேன்,
உயரத்தில் பறந்தது விமானம்;
என் சந்தோஷ சிறகுகளை
கடன் வாங்கி.-